மன வரைபடம்
Appearance

மன வரைபடம் மனத்தில் தோன்றும் கருத்துக்களையும் அவற்றுக்கிடையேயான தொடர்புகளையும் வரைபடமாக ஆவணப்படுத்தும் ஒரு எளிய முறை ஆகும். சொல், படம், குறியீடு என எந்த எளிய முறையாலும் ஒரு கருத்தை குறித்து, அதனோடு தொடர்ந்து தோன்றும் கருத்துக்களையும் கோடுகளால் இணைத்து குறிப்பதாகும். கருத்துக்களை ஆக்க, பாக்க, பகுக்க, கட்டமைக்க பயன்படும் இந்த வழிமுறை, படித்தல், ஒழுங்குபடுத்தல், சிக்கல் தீர்த்தல் , முடிவு செய்தல் ஆகிய செயல்களில் உதவுகிறது.