மனோரமா தம்புராட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மனோரமா தம்புராட்டி (Manorama Thampuratti) ஒரு 18 ஆம் நூற்றாண்டுச் சமற்கிருத அறிஞர் ஆவார் இவர் கோட்டக்கல்லைச் சேர்ந்த கிழக்கே கோவிலகத்தைச் சார்ந்தவர். இது கோழிக்கோடு நிலக்கிழார் ஆட்சிப் பிரிவுகளில் ஒன்றாகும். இவர் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் சமற்கிருதத்தில் அறிஞர் ஆனார். அப்போது பெண்கள் எவரும் சமற்கிருதம் படிக்கும் வழக்கம் இல்லை. இவர் இளமையிலேயே சமற்கிருதத்தில் ஆழ்ந்த புலமை பெற்றதால் இம்மொழியின் சாத்திரங்களையும் அப்போதே பயிலும் வாய்ப்பு பெற்றார்.

இவர் சமற்கிருதத்தில் பல கவிதைகளை இயற்றிக் கேரளாவில் கவிஞராகப் பரவலாக அறியப்பட்டுள்ளார். என்றாலும், சில சுலோகங்களைத் தவிபிவரது பிற கவிதைகள் இப்போது கிடைக்கவில்லை.

இவர் திருவாங்கூர் மகாராசாவாகிய தர்மராஜா சிறீ கார்த்திகா திருநால் பலராமவர்மா (1724–98) காலத்தவர் ஆவார். திப்பு சுல்தான் வடக்கு மலபாரை வென்றதும் இவர் திருவாங்கூரில் தலைமறைவாகினார்ரிவரது தகலைமறைவு காலத்தில் தான் திருவாங்கூர் அரசர் பாலராம பாரதம் எனும் நாடகத்தை இயற்றினார். இதற்கு மனோரமா தம்புராட்டி உரையும் அறிவுரையும் வழங்கியுள்ளார். இந்நிகழ்ச்சி நாடகத்தை முழுமைபெறச் செய்தது.[1] அரசர் கார்த்திகா திருநாளுடனான இவரது கடிதத் தொடர்புகள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தனவாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Devika , Methil. "Balarama Bharatam by Maharaja Kartika Thirunal Balarama Varma". பார்த்த நாள் May 13, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோரமா_தம்புராட்டி&oldid=2555398" இருந்து மீள்விக்கப்பட்டது