மனோஜ் யாதவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனோஜ் யாதவா
அரியானா காவல் பணி
பேட்ஜ் எண்19881003
Allegianceஇந்தியக் காவல் பணி
தரம்காவல்துறையின் தலைமை இயக்குனர்

மனோஜ் யாதவா (Manoj Yadava) என்பவர் இந்தியக் காவல்துறை அதிகாரி ஆவார். இவர் தற்போதைய அரியானா காவல்துறையின் தலைமை இயக்குநராக உள்ளார்.[1][2] இவர் முன்பு மத்திய உள்துறை அமைச்சகத்தில் உளவுத்துறையின் இணை இயக்குநராகப் பதவி வகித்துள்ளார்.[3]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

யாதவா இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலிகார் நகரில் பிறந்தார்.[4]

இவரது மகன் ஆதித்யா விக்ரம் யாதவ், இந்திய ஆட்சிப் பணித் தேர்வில், (இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு 2018) 72வது தரம் பெற்று, தற்போது கோஹ்பூர் துணைப் பிரிவு அதிகாரியாக பணியாற்றுகிறார்.[5]

பணி[தொகு]

யாதவா 1988ல் இந்தியக் காவல் பணி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அரியானாவின் பல மாவட்டங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றியவர்.[4]

இவர் பிப்ரவரி 2003-ல் இந்திய உளவுத்துறையில் சேர்ந்தார்.[6]

பிப்ரவரி 18, 2019 அன்று இவர் அரியானாவின் காவல்துறை தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டார். 7 சனவரி 2021 அன்று அரியானா அரசு இவரது பதவிக்காலத்தை மறு உத்தரவு வரும் வரை நீட்டித்தது.[7]

இவருக்குப் பதிலாக 16 ஆகத்து 2021 அன்று 1988 பிரிவு இந்தியக் காவல் பணி அதிகாரியான பிரசாந்த குமார் அகர்வால் நியமிக்கப்பட்டார்.

மேலும் பார்க்கவும்[தொகு]

காவல்துறை தலைமை இயக்குனர்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Manoj Yadava takes over as new Haryana DGP". The Times of India (in ஆங்கிலம்). February 22, 2019. பார்க்கப்பட்ட நாள் 2021-01-30.
  2. "18 FIRs, 2 cancelled, 14 pending for investigation and 2 chargesheets filed: Haryana DGP to HC". The Indian Express (in ஆங்கிலம்). 2021-02-04. பார்க்கப்பட்ட நாள் 2021-02-06.
  3. "Haryana government names new DGP: '88-batch Manoj Yadava". The Indian Express (in ஆங்கிலம்). 2019-02-19. பார்க்கப்பட்ட நாள் 2021-01-30.
  4. 4.0 4.1 "Manoj Yadav, IPS officer, appointed as Haryana's DGP". News Nation English (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-30.
  5. "नियुक्तिः हरियाणा के नए डीजीपी बने मनोज यादव, आईबी के अतिरिक्त निदेशक के पद पर हैं तैनात". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-04-19.
  6. "Manoj Yadava is Haryana DGP". Tribuneindia News Service (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-30.
  7. "Haryana govt extends tenure of DGP Manoj Yadava till further orders". Hindustan Times (in ஆங்கிலம்). 2021-01-07. பார்க்கப்பட்ட நாள் 2021-01-30.

8. https://www.drishtiias.com/state-pcs-current-affairs/prashanta-kumar-agrawal-is-the-new-haryana-director-general-of-police-dgp

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோஜ்_யாதவா&oldid=3578423" இலிருந்து மீள்விக்கப்பட்டது