உள்ளடக்கத்துக்குச் செல்

மனிதர்களின் மற்றும் குடிமக்களின் உரிமைகள் சாற்றுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆகத்து 26, 1789ஆம் ஆண்டு பிரான்சின் தேசிய அரசமைப்பு மன்றம் மனிதர்களின் மற்றும் குடிமக்களின் உரிமைகள் சாற்றுரையை ஏற்றது.

மனிதர்களின் மற்றும் குடிமக்களின் உரிமைகள் சாற்றுரை (Declaration of the Rights of Man and of the Citizen) (பிரெஞ்சு:Déclaration des droits de l'Homme et du Citoyen) என்ற ஆவணம் பிரெஞ்சுப் புரட்சியின் பின்னர் உலகளாவிய அனைத்துத் தட்டு மக்களுக்கும் தனிநபராகவும் மற்றும் கூட்டாகவும் வரையறுக்கப்பட்ட உரிமைகளைக் கொண்ட அடிப்படை ஆவணமாகும். இயல்புரிமைக் கோட்பாட்டினால் உந்தப்பட்ட இந்த உரிமைகள் எல்லோருக்குமானது; எந்நேரத்திலும், எவ்விடத்திலும் பொருத்தமானது; மனிதரின் இயற்கைக்கு தொடர்புள்ளது. இது பிரெஞ்சு குடிமக்களுக்கும் எவ்வித விலக்குமின்றி அனைத்து மனிதர்களுக்கும் அடிப்படை உரிமைகளை வரையறுத்தாலும், மகளிர் மற்றும் அடிமைகளின் நிலையை வரையறுக்கவில்லை; இருப்பினும், இதுவே பன்னாட்டு மனித உரிமைகள் ஆவணங்களுக்கு முன்னோடியாக அமைந்தது.

வெளியிணைப்புகள்

[தொகு]