மதேரா (தீவு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செயற்கைத் துணைக்கோள் படம் மதேராத் தீவு
இருப்பிடம்

மதேரா என்பது அத்திலாந்திக்குப் பெருங்கடலில் உள்ள போர்த்துகல் நாட்டின் தன்னாட்சிப் பகுதியான ஒரு தீவு. மதேரா தீவுக்கூட்டத்தில் உள்ள ஆகப்பெரிய, 740.7 சதுர கி,மீ பரப்பளவு கொண்ட தீவு. இத்தீவில் 2011 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 262,456. பேர்கள் வாழ்கிறார்கள். இந்த மதேரா தீவுக்கூட்டத்தில் அகோத்தினோ தீவு, சாவோ இலாரென்சோ தீவு மோலே தீவு ஆகியவும் உள்ளன.

இந்த மதேரா தீவு அத்திலாந்திக்குப் பெருங்கடலின் அடித்தளத்தில் இருந்து எழுந்து கடல் மட்டத்துக்கு மே;ல் தெரியுமாறு நிற்கும் எரிமலைக் கேடயமாக உள்ளது. எரிமலையானது ஆப்பிரிக்க ஓடு என்பதில் பெருங்கடலில் கிழக்கு மேற்காக அமைந்த பிளவில் அமைந்துள்ளது.[1][2] எரிமலையின் இயக்கம் 6500 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. இதன் விளைவாக கூம்பு வடிவ, எரிகுழம்பு எழுந்த (cinder cones), பகுதிகள் உருவாகியுள்ளன. இந்தத் தீவு மயோசீன் (Miocene) என்னும் காலப்பகுதியில் 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக உருவாகத்தொடங்கி பிளைசுட்டோசீன் (Pleistocene) என்னும் காலப்பகுதியில் அதாவது 700,000 ஆண்டுகளுக்கு முன்புவரை தொடர்ந்தது.[3]

மதேராத் தீவே இத்தீவுக்கூட்டத்தில் ஆகப்பெரிய தீவு. இதன் பரப்பளவு 740.7 சதுர கி.மீ. இதன் நீளம் 57 கி,மீ, மிக அகலமான பகுதி 22 கி,மீ. இந்தத் தீவின் மிக உயரமான இடம் பிக்கோ உரூயிவோ (Pico Ruivo). இதன் உயரம் 1862 மீ ஆகும்.

பல சிறு சிற்றூர்கள் இருந்தாலும், இந்த அழகான தீவுக்கு வருகை தரும் சுற்றாலப் பயணியர்களே அதிகம். ஆண்டுதோறும் ஏறத்தாழ 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணியர் வருகின்றனர். [4] . மதேராவில் உள்ள இலாரிசில்வா (Laurissilva ) காடு ஐக்கிய நாடுகளின் உலக மரபிடமாக அறிவிக்கப்பட்ட இடம்.

மதேரா தீவின் தலைநகரம் புஞ்சால் (Funchal).


மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்[தொகு]

  1. Geldemacher et al., 2000.
  2. Ribeiro, 2001.
  3. "Madeira". Global Volcanism Program. சிமித்சோனிய நிறுவனம்.
  4. https://www.statista.com/statistics/1155154/number-of-visitors-in-madeira/#:~:text=This%20region%20welcomed%20nearly%201.5,million%20overnight%20visitors%20in%202022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதேரா_(தீவு)&oldid=3800409" இலிருந்து மீள்விக்கப்பட்டது