மதுபால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதுபால் (2008)

மதுபால் கண்ணம்பத்து மலையாள நடிகர், இயக்குநர், எழுத்தாளர். தலப்பாவு, ஒழிமுறி ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்

வாழ்க்கை[தொகு]

மதுபால் கோழிக்கோட்டில் பிறந்தார். பாலக்காட்டில் வளர்ந்தார். வணிகவியலில் பட்டம் பெற்றார். இதழியலாளராக சிலகாலம் பணியாற்றியபின் ராஜீவ் அஞ்சல், பரத கோபி ஆகியோரின் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார்

1990ல் ஜட்ஜ்மெண்ட் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். 1994 ல் வெளிவந்த காஷ்மீரம் என்ற திரைப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்தார். 90 படங்களில் நடித்திருக்கிறார்

2010ல் தலப்பாவு என்றபடத்தை இயக்கினார். 2012ல் இவர் இயக்கிய திரைப்படம் ஒழிமுறி. இரண்டுமே தேசிய, மாநில விருதுகள் பெற்றன

நூல்கள்[தொகு]

  • ஈ ஜீவிதம் ஜீவிச்சு தீர்க்குந்நது (சிறுகதைகள்)
  • ஹீபுவினு ஒரு பிரேமலேகனம் (சிறுகதைகள்)
  • மதுபாலின்றே கதகள் (சிறுகதைகள்)
  • ஃபேஸ்புக் (நாவல்)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுபால்&oldid=2693366" இலிருந்து மீள்விக்கப்பட்டது