மதன்மோகன் தத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதன்மோகன் தத்தா

மதன்மோகன் தத்தா (Madanmohan Dutta) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1957 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 13 ஆம் தேதியன்று பிரேன் சந்திர தத்து என்பவருக்கு மகனாக இவர் பிறந்தார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராக பாலாசோர் தொகுதியில் போட்டியிட்டு 16 ஆவது ஒடிசா சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு உட்பட்டிருந்த மதன்மோகன் தத்தா 2020 ஆம் ஆண்டு சூன் மாதம் 17 ஆம் தேதியன்று புவனேசுவரில் மாரடைப்பால் இறந்தார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Odisha MLA Madan Mohan Dutta dies of heart attack". timesofindia. பார்க்கப்பட்ட நாள் 2020-06-23.
  2. "Odisha's BJP MLA Madan Mohan Dutta dies of cardiac arrest". hindustantimes. பார்க்கப்பட்ட நாள் 2020-06-23.
  3. "Odishas BJP MLA Madan Mohan Dutta passes away". outlookindia. பார்க்கப்பட்ட நாள் 2020-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதன்மோகன்_தத்தா&oldid=3833284" இலிருந்து மீள்விக்கப்பட்டது