மணிமங்கலம் இராச கோபாலசாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மணிமங்கலம் இராச கோபாலசாமி கோயில் (Manimangalam Rajagopalaswamy Temple) என்பது தமிழ்நாட்டில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் மணிமங்கலம் என்ற ஊரில் உள்ள பெருமாள் கோயிலாகும்.

இந்த இராச கோபாலப் பெருமாளை, கல்வெட்டுகளில் ஸ்ரீமத் துவராபதி, ஸ்ரீமத் துவராபுரி தேவர், வண் துவராபதி, ஸ்ரீ காமக்கோடி விண்ணக ராழ்வார் என்ற பெயர்களால் குறிக்கபட்டுள்ளார்.[1]

அமைவிடம்[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 49 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 12°54'58.3"N, 80°02'16.7"E (அதாவது, 12.916188°N, 80.037962°E) ஆகும்.

அமைப்பு[தொகு]

பொதுவாக பெருமாள் கோயில்களில் மூலவரின் வலது கையில் சக்கரமும், இடது கையில் சங்கும் இருக்கும். ஆனால் இக்கோயிலில் உள்ள மூலவர் வலது கையில் சங்கும், இடது கையில் சக்கரமும் கொண்டதாக உள்ளார்.[2]

கருவறையில் நான்கு கரங்களுடன் உள்ள பெருமாள் பூதேவி, ஸ்ரீதேவி ஆகியோருடன் நின்ற கோலத்தில் காடசியளிக்கிறார். இடது கையில் தண்டாயுதத்துடனும், மார்பில் லட்சுமியையும் கொண்டதாக உள்ளார். சந்நிதியின் நுழைவாயிலின் மேலே பள்ளிகொண்ட நிலையில் கண்ணனின் சிற்பம் உள்ளது. இங்குள்ள தாயார் செங்கமலவல்லி தனி சன்னிதியில் உள்ளார். இக் கோயிலில் ஆண்டாளுக்கு சன்னிதி அமைக்கபட்டுள்ளது. பெருமாள் சன்னிதியின் சுற்றுச் சுவரில் தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர், நரசிம்மர், காளிங்க நர்தண கிருஷ்ணர் போன்றோரின் சிற்பங்கள் உள்ளன.[2]

சிறப்பு வழிபாடுகள்[தொகு]

இந்க் கோயிலில் வைகுண்ட ஏகாதசி புரட்டாசி சனி நாட்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. வேங்கடராமையா, சோழர் கால அரசியல் தலைவர்கள் நூல், பக்கம் 77, பதிப்பு பிப்ரவரி, 1977 கட்டுரை, ஜெயங்கொண்ட சோழப் பிரம்மாதிராசன்
  2. 2.0 2.1 அருள்மிகு ராஜ கோபாலசுவாமி கோயில் திருக்கோயில், தினமலர் கோயில்கள்