மடல் வழி நட்பு
Appearance
முகம் தெரியாமல் முகவரியை மட்டும் கொண்டு அஞ்சல் வழியாக ஒருவருக்கொருவர் ஏற்படுத்திக் கொள்ளும் நட்பு மடல் வழி நட்பு எனப்படுகிறது. இந்த மடல் வழி நட்பிற்கென உலகம் முழுவதும் பல அமைப்புகள் இருந்தன. தற்போது கணினி மற்றும் இணையம் வழியிலான தகவல் தொடர்பு அதிகரித்த பின்பு மின்னஞ்சல் மற்றும் இதர வழிகளிலான நட்பு அதிகரித்து விட்டதால் மடல் வழி நட்புக் கொள்பவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து போய் விட்டது.
மடல் வழி நண்பர்கள் அமைப்புகள்
[தொகு]இந்தியாவில் சில மடல் வழி நண்பர்கள் அமைப்புகள் இன்னும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றுள் ஒன்று இந்திய மடல் வழி நண்பர் பேரவை. இந்த அமைப்பு மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது.