மச்சிலே யாரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதுகு மச்சில் சாய்தல் - கோட்டுருப் படம்

மச்சிலே யாரு எனக் கேட்டு உரையாடி விளையாடப்படும் சிறுமியர் விளையாட்டு இது. மாடிவீட்டு மொட்டை மாடியை மச்சு என்பது வழக்கு.

ஆடும் முறை[தொகு]

குனிந்திருக்கும் ஒருவர் முதுகு பச்சாகக் கருதப்படும். அதன்மீது மற்றொருவர் குப்புறவோ, மல்லாந்தோ சாய்ந்திருப்பார். இருவருக்கும் இடையே இசையோடு கூடிய உரையாடல் நிகழும். உரையாடலின் நிறைவில் குனிந்திருப்பவர் விசுக்கென எழுவார். இதனால் சாய்ந்திருப்பவர் கீழே விழ நேரும்.

இது கவனமாக இருக்கப் பயிற்சி தரும் ஒருவகை விளையாட்டு.

பாடல்

குனிந்திருப்பவர் சாய்ந்திருப்பவர்
மச்சிலே யாரு நானு
என்ன செய்கிறாய் நெல் காயப் போடுகிறேன்
என்ன நெல்லு பச்சை நெல்லு
பச்சை நெல்லு எதற்கு பணியாரம் சுட
பணியாரம் எனக்கு பிசுக்கு

(இப்படிச் சாய்திருப்பவர் சொல்லும்போது குனிந்திருப்பவர் விசுக்கென எழுவார்)

இவற்றையும் பார்க்க[தொகு]

கருவிநூல்[தொகு]

  • இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு-விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு, 1980
"https://ta.wikipedia.org/w/index.php?title=மச்சிலே_யாரு&oldid=1019526" இலிருந்து மீள்விக்கப்பட்டது