உள்ளடக்கத்துக்குச் செல்

மசாரு இபுகோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மசாரு இபுகோ
井深 大
தாய்மொழியில் பெயர்井深 大
பிறப்பு11 ஏப்ரல் 1908
நிக்கோ , யப்பான்
இறப்புதிசம்பர் 19, 1997(1997-12-19) (அகவை 89)
தோக்கியோ, யப்பான்
கல்விவாசெதா பல்கலைக்கழகம்
அறியப்படுவதுதுணை நிறுவுனர் சோனி
வாழ்க்கைத்
துணை
செய்கோ மேதா
(தி. 1936, divorced)
[1]
பிள்ளைகள்2 மகள்கள் , 1 மகன்
விருதுகள்ஐஇஇஇ நிறுவன விருது (1972)

மசாரு இபுகா (Masaru Ibuka; 井深 大 இபுகா மசாரு. ஏப்ரல் 11, 1908 – திசம்பர் 19, 1997) ஒரு யப்பானியர் ஆவார். மின்னியல் துறையில் பல பொருட்களை உற்பத்தி செய்து உலகின் முன்னணி தொழில் நிறுவனமாக விளங்கும் சோனி நிறுவனத்தைத் தொடக்கியவர்களுள் ஒருவர்.[2][3]

ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

மசாரு இபுகோ ஏப்ரல் 11, 1908இல் டசுக்கு இபுகோவிற்கு மூத்த மகனாகப் பிறந்தார். டசுக்கு இபுகோ ஒரு கட்டடக்கலை தொழில்நுட்பவியலாளரும் இனசோ நிடோபின் மாணவரும் ஆவார்.[4] மசாரு இபுகோவின் முன்னோர்கள் ஐசு நிலப்பரப்பினை நிர்வகிக்கும் தலைவர்களாக இருந்தார்கள். யா இபுகோ மற்றும் இபுகோ ககினோசுகி இவரின் உறவினர்கள் ஆவார்கள். மசாரு தனது இரண்டு வயதில் தந்தையை இழந்தார். இதன் பின்னர் இவரது தாத்தாவினால் பராமரிக்கப்பட்டு வந்தார்.[5] மசாருவின் தாயின் இரண்டாம் திருமணத்திற்கு பின்னர் மசாரு கோபேயிற்கு இடம்பெயர்ந்தார். இவர் ஹியோகோ மாநில முதலாவது கோபே ஆண்கள் பள்ளி (இப்பொழுது, ஹியோகோ மாநில கோபே உயர்நிலை பள்ளி) நுழைவுதேர்வில் தேர்வு பெற்றார். இந்த வெற்றி குறித்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.[4]

வாழ்க்கை

[தொகு]

1933இல் வாசெதா பல்கலைக்கழகத்தில்[6] பட்டம் பெற்ற பின்னர் ஒளி இரசாயனஆய்வுகூடத்தில் வேலைக்கு சேர்ந்தார். இந்நிறுவனம் திரைப்படச் சுருள்களை செயல்முறைக்கு உட்படுத்தும் நிறுவனமாகும். பின்னர் இரண்டாம் உலக யுத்தம் நடக்கும் போது யப்பானிய பேரரசின் கடற்படையின் யுத்தக்கால கடற்படை ஆய்வுக்குழுவில் உறுப்பினராக இருந்தார். 1945 புரட்டாதி மாதத்தில் நிறுவனம் மற்றும் கடற்படையிலிருந்து விலகி வானொலி பழுதுநீக்கும் கடையை தோக்கியோவிலுள்ள நிக்கோன்பசி என்ற இடத்தில் தொடங்கினார்.[7][8]

1946இல் அக்கியோ மோரிட்டா எனும் சக யுத்தகால ஆய்வாளர் செய்தித்தாளில் இபுகோவின் புதிய வணிக முயற்சியை அறிந்து, அவருடன் கடித தொடர்பை மேற்கொண்டு பின்னர் டோக்கியோவிற்கு வந்து அவருடன் இணைந்துகொண்டார். மோரிட்டோவின் தந்தையின் பண முதலீடு மூலம் இவர்கள் டோக்கியோ தொலைதொடர்பாடல் பொறியியல் கூட்டுறவு நிறுவனத்தை தொடங்கினார்கள். இது 1958களில் சோனி நிறுவனமாக பெயர்மாற்றத்துக்கு உள்ளானது.[9][10] 1950களில் பெல் ஆய்வு நிறுவனத்திடமிருந்து திரிதடையம் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான உரிமத்தை பெறுவதில் இபுகோ முக்கிய பங்காற்றினார்.[11] இது திரிதடையம் தொழில்நுட்பத்தை இராணுவமல்லாத தேவைகளுக்கு பயன்படுத்திய ஆரம்ப நிறுவனங்களில் ஒன்றாக சோனி நிறுவனத்தை ஆக்கியது.[12] 1967 களில் சோனியின் திரிநிட்ரோன் வண்ண தொலைக்காட்சியினை ஆய்வுசெய்து வடிவமைத்த குழுவின் தலைவராகவும் இபுகோ இருந்தார்.[5] இபுகோ சோனி நிறுவன தலைவராக 1950 தொடக்கம் 1971 வரையும், முதன்மைத் தலைவராக 1971 தொடக்கம் 1976 வரையும் செயற்பட்டார். 1976இல் நிறுவனப் பணிகளிலிருந்து ஒய்வுப்பெற்றார்.[5]

மேற்கோள்

[தொகு]
  1. www.encyclopedia.com/history/encyclopedias-almanacs-transcripts-and-maps/ibuka-masaru
  2. Kirkup, James. "Obituary: Masaru Ibuka," Independent (London). December 22, 1997.
  3. Fasol, Gerhard. "Electrical engineer and co-founder of SONY Obituary: Masaru Ibuka (1908–97)" Nature (London). February 26, 1998.
  4. 4.0 4.1 Secret stories ⑭ muie louca KOBECCO பரணிடப்பட்டது அக்டோபர் 17, 2020 at the வந்தவழி இயந்திரம் (in Japanese)]
  5. 5.0 5.1 5.2 Ibuka, Makoto; 井深亮 (1998). Chichi Ibuka Masaru. Goma Shobō. ISBN 4-341-33009-8. கணினி நூலகம் 44766021.
  6. "Sony founder and Waseda alumnus Masaru Ibuka|Waseda University Archives". Archived from the original on August 27, 2021. Retrieved August 3, 2020.
  7. "Sony Global – Sony History Chapter1 Rebuilding from the Ashes". Archived from the original on January 22, 2021. Retrieved June 21, 2017.
  8. "Chronology – About Akio Morita – Akio Morita Library". Archived from the original on March 28, 2023. Retrieved August 1, 2018.
  9. "World: Asia-Pacific Sony co-founder dies". BBC. October 3, 1999. Archived from the original on March 28, 2023. Retrieved May 27, 2012.
  10. "Sony Global – Sony History Chapter1 Rebuilding from the Ashes". www.sony.net (in ஆங்கிலம்). Archived from the original on January 22, 2021. Retrieved June 21, 2017.
  11. "Masaru Ibuka – Gold Mercury International" (in en-GB). Gold Mercury International இம் மூலத்தில் இருந்து December 3, 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181203164404/http://www.goldmercury.org/leadership/masaru-ibuka/. 
  12. "Masaru Ibuka". prezi.com (in ஆங்கிலம்). Archived from the original on July 8, 2018. Retrieved June 21, 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மசாரு_இபுகோ&oldid=4455524" இலிருந்து மீள்விக்கப்பட்டது