மக்னீசியம் - காற்று எரிபொருள் மின்கலம்
மக்னீசியம்–காற்று எரிபொருள் மின்கலம் (Magnesium-Air Fuel Cell. MAFC) என்பது ஒரு வகையான எரிபொருள் மின்கலம் ஆகும். இம்மின்கலத்தில் மக்னீசியம், நேர்மின்வாயாகவும், காற்றிலுள்ள ஆக்சிசன் எதிர்மின்வாயாகவும் செயல்படுகின்றன. உப்புநீர் மின் பகுளியாகச் செயல்படுகிறது[1]
மேக் பவர் திட்டங்கள் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகள் மற்றும் வணிக மையமாக்கல் காரணமாக இத்தொழில்நுட்பம் 90 சதவீதம் அளவுக்கு மேம்பட்டு 20 முதல் 55 பாகை செல்சியசு வெப்பநிலை வரை உருவாக்கி செயல்படுகின்றன[2]