மக்கள் அறிவியல் நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மக்கள் அறிவியல் நிறுவனம் (People's Science Institute) இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்திலுள்ள டேராடூனில் இயங்கும் ஓர் அரசு சாரா நிறுவனமாகும். இயற்கை வள மேலாண்மை, பாதுகாப்பு உயிரியல் மற்றும் நிலையான வளர்ச்சியை இந்நிறுவனம் ஊக்குவிக்கிறது. 1988 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது [1]

நிறுவுதல்[தொகு]

"ஏழைகளுக்கு அதிகாரமளித்தல் மற்றும் கிடைக்கக்கூடிய மனித மற்றும் இயற்கை வளங்கள் உற்பத்தி போன்றவற்றை நிலையாகவும் சமமாகவும் பயன்படுத்துவதன் மூலம் வறுமையை ஒழிக்க உதவுவது" என்பது இவ்வமைப்பின் கூறப்பட்ட நோக்கம் ஆகும்.[1]

செயல்பாடுகள்[தொகு]

கங்கை மாசு[தொகு]

கங்கையின் மாசுபாட்டைக் குறைக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மக்கள் அறிவியல் நிறுவனம் தொடர்ந்து பேசுகிறது.[2]

நதியில் அணைக்கட்டு[தொகு]

மக்கள் அறிவியல் நிறுவனத் தலைவர் குரு தாசு அகர்வால் கங்கை பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் செயலற்று மௌனமாக இருப்பதை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார்.[3] குறிப்பாக இவர் உலோகரிநாக் பாலா நீர் மின் திட்டம் மற்றும் பாகீரதி ஆற்றின் குறுக்கே பல மனேரி திட்டம் ஆகிய திட்டங்கள் கட்டுவதை நிறுத்த முயன்றார்.[4][5]

மற்ற நிறுவன ஊழியர்களும் நீர்ப்பொறியியல் திட்டங்களுக்கு தண்ணீரை பெருமளவில் இடமாற்றம் செய்வது தொடர்பான தலைப்புகளில் இதேபோல் எழுதியுள்ளனர்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "People's Science Institute". peoplesscienceinstitute.org.
  2. "Water quality in Ganga at Haridwar poor: NGO". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 18 January 2010. Archived from the original on 9 April 2013. பார்க்கப்பட்ட நாள் 23 October 2011.
  3. "Noted Indian Scientist To Fast Unto Death to Protest Dams on Ganges and India's Pollution Control". prweb.com. 2011. பார்க்கப்பட்ட நாள் 23 October 2011.
  4. "Fast threat on Ganga bank to save river". telegraphindia.com. 1 June 2008. பார்க்கப்பட்ட நாள் 23 October 2011.
  5. Tripathi, Purnima S. (28 February – 13 March 2009). "Captive Ganga". Frontline 26 (5). http://www.hindu.com/fline/fl2605/stories/20090313260504100.htm. பார்த்த நாள்: 23 October 2011. [தொடர்பிழந்த இணைப்பு]
  6. Mathew, Thomas J (31 December 2008). "Averse engineering". downtoearth.org.in. Down To Earth. பார்க்கப்பட்ட நாள் 23 October 2011.

புற இணைப்புகள்[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளம்