மகேந்திரபள்ளி திருமேனியழகர் கோயில்
Appearance
மகேந்திரபள்ளி திருமேனியழகர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
[தொகு]கொள்ளிடம் ஆற்றுக்குக் கிழக்கில், சீர்காழி-சிதம்பரம் சாலையில் இக்கோயில் அமைந்துள்ளது.[1]
இறைவன், இறைவி
[தொகு]இக்கோயிலில் உள்ள மூலவர் திருமேனியழகர் என்றழைக்கப்படுகிறர். இறைவி வடிவாம்பிகை ஆவார். சூரியன், சந்திரன், பிரம்மா ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டுள்ளனர்.[1]
வரலாறு
[தொகு]இந்திரன் வழிபட்டதால் மகேந்திரபள்ளி என்று பெயர் பெற்றது. அனைத்து வகையான விலங்கினங்களும் இறைவனை வழிபட்டு முத்தி பெற்ற தலம் என்ற சிறப்பினை உடையது.கோயிலுக்கு முன்பாக இந்திர தீர்த்தம் உள்ளது. அகில், வெண்கடம்பு போன்ற மரங்களும், தாழை, நீர்முள்ளி, குவளை போன்ற தாவர வகைகளும் கடலோரக்காற்றிலிருந்தும், சூறாவளிக்காற்றிலிருந்தும் பாதுகாக்கும் பெருமையுடைய தலம் என்று ஞானசம்பந்தர் இத்தலம் குறித்துக் கூறுகிறார்.[1]