உள்ளடக்கத்துக்குச் செல்

மகுவா முகர்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகுவா முகர்ஜி
பணிநடன நிபுணர், ஆராய்ச்சியாளர்

மகுவா முகர்ஜி (Mahua Mukherjee ) இந்திய பாரம்பரிய நடன வடிவமான கௌடிய நிருத்யா‎ என்ற நடனத்தில் நிபுணராவார்.[1] இரவீந்திர பாரதி பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராகவும் ஆசிரியராகவும் அதன் நுண்கலை பீடத்தின் தலைவராகவும் உள்ளார்.[2] தனது கணவர் அமிதவ முகர்ஜியுடன் சேர்ந்து, 1980-களிலிருந்து தனது வாழ்க்கையின் மூலம் நடன பாணியை புதுப்பித்து வருகிறார்.[3] அமெரிக்காவின் ஓக்லஹோமா பல்கலைக்கழகத்தில் வருகை தரும் பேராசிரியராக நிகழ்ச்சிகள் மற்றும் விரிவுரைகளையும் வழங்கியுள்ளார்.[4][5] இவர் பிரதீந்திரநாத், சசி மகதோ, நரோத்தம் சன்யால், கம்பீர் சிங் முதா, முகுந்த் தாஸ் பட்டாச்சார்யா போன்ற பயிற்சியாளர்களிடம் சாவ், நச்னி, குசான் மற்றும் கீர்த்தனியா மரபுகளின் நடனங்களைக் கற்றுள்ளார்.[6]

முகர்ஜி கௌடியா நிருத்ய பாரதி மற்றும் மித்ராயன் ஆகிய நிறுவனங்களின் இயக்குநராகவும் உள்ளார். தாவரவியலில் முனைவரான இவர் ஆரம்பத்தில் பரத நாட்டியத்திலும் பயிற்சி எடுத்தார். நைஜீரிய எழுத்தாளர் தனுரே ஓஜைடே எழுதிய "தி பியூட்டி ஐ ஹேவ் சீன்: எ ட்ரைலோஜி" என்ற தொகுப்பில் வெளியிடப்பட்ட ஒரு கவிதையிலும் இவர் இடம் பெற்றுள்ளார்.[7] இந்தியத் திரைப்படப் பிரிவு உருவாக்கிய கீத்மய் தன்மய் - டிரான்ஸ் இன் மோஷன் என்ற ஆவணப்படத்திலும் நடித்துள்ளார்.[8]

புத்தகங்கள்

[தொகு]

இவர் வங்காளப் பாரம்பரிய நடனமான, கௌடியா நிருத்யா என்ற நடன மரபைப் பற்றி நூல் ஒன்றை எழுதியுள்ளார். இது கொல்கத்தாவில் உள்ள ஆசிய சமூகம் என்ற அமைப்பின் மூலம் வெளியிடப்பட்டது[9]

சான்றுகள்

[தொகு]
  1. Foster, S. (2009-06-10). Worlding Dance (in ஆங்கிலம்). Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780230236844.
  2. Bharatram, Kumudha (9 April 2011). "Dance of the ancients". தி இந்து. http://www.thehindu.com/features/friday-review/dance/dance-of-the-ancients/article1608014.ece. பார்த்த நாள்: 7 January 2014. 
  3. Alom, Zahangir (11 November 2013). "Of euphoria and grace in dancing devotion". The Daily Star (Bangladesh). http://archive.thedailystar.net/beta2/news/of-euphoria-and-grace-in-dancing-devotion/. பார்த்த நாள்: 7 January 2014. 
  4. Parul (7 June 2013). "Summer players". Indian Express. http://indianexpress.com/article/cities/chandigarh/summer-players/. பார்த்த நாள்: 7 January 2014. 
  5. Alom, Zahangir (25 March 2012). "Presentation of Navarasa through dance". The Daily Star (Bangladesh). http://archive.thedailystar.net/newDesign/print_news.php?nid=227573. பார்த்த நாள்: 7 January 2014. 
  6. Rajan, Anjana (26 December 2006). "The wheel has come full circle". தி இந்து இம் மூலத்தில் இருந்து 8 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121108051652/http://www.hindu.com/ms/2006/12/26/stories/2006122600040100.htm. பார்த்த நாள்: 7 January 2014. 
  7. Tanure Ojaide (2010). The Beauty I Have Seen: A Trilogy. African Books Collective. p. 88. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9788422297.
  8. "Trance in Motion : Short film by Films Division". Gadurr Media, YouTube. பார்க்கப்பட்ட நாள் 7 January 2013.
  9. Mukherjee, Mahua (2000). Gaudiya Nritya (in Bengali). Kolkata: The Asiatic Society.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகுவா_முகர்ஜி&oldid=3741806" இலிருந்து மீள்விக்கப்பட்டது