உள்ளடக்கத்துக்குச் செல்

மகாலிங்க மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகாலிங்க மலை என்பது திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வட்டம், ஆய்க்குடி ஊராட்சி கம்பிளி கிராமத்தில் உள்ள சிவன் கோயிலொன்றைக் கொண்ட மலையாகும். இங்கு உள்ள சிவலிங்கம் தவிர்த்து பெருங்கற்களும் லிங்கம் போல் உள்ளதால் இது மகாலிங்க மலை என்று பெயர் பெற்றதாகக் கூறுவர். இதை அருணாச்சல சித்தர் என்பவரின் வழி வந்தவர்கள் தற்போது நடத்தி வருகிறார்கள். இங்கு மாலை ஆறு மணிக்கு மேல் பக்தர்கள் செல்வதற்கு வனத்துறையால் தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற மலைச்சிவன் கோயில்களில் உள்ளது போன்றே இம்மலை லிங்கத்தையும் சித்தர்கள் வழிபடுவதாக நம்பிக்கை உண்டு.

இங்கு காணப்ப்டும் ஆட்டுரல்களைச் சித்தர்கள் முற்காலத்தில் மூலிகை தயாரிப்புக்குப் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். சித்திரா பௌர்ணமி அன்று இங்கு சிறப்புப்பூஜை நடைபெற்று வருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாலிங்க_மலை&oldid=2112956" இலிருந்து மீள்விக்கப்பட்டது