மகதலேனா கொஞ்சலேசு சஞ்சேசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகதலேனா கொஞ்சாலேசு சஞ்சேசு
பிறப்புமரியா மகதலேனா கொஞ்சாலேசு சஞ்சேசு
மே 8, 1974 (1974-05-08) (அகவை 49)
மெக்சிகோ மாநகரம், மெக்சிகோ
படித்த கல்வி நிறுவனங்கள்மெக்சிகோ தேசிய தற்சாபு பல்கலைக்கழகம்
பணிவானியற்பியலாளர்
பணியகம்
 • மிக்குத்துயர நீர் செரென்கோவ் செய்முறை
 • மெக்சிகோ தற்சார்பு தேசியப் பல்கலைக்கழக வானியல் நிறுவனம்
விருதுகள்
 • எல்சிவியேர் அறக்கட்டளை விருது (2011)
 • Reconocimiento Sor Juana Inés de la Cruz (2015)

மரியா மகதலேனா கொஞ்சாலேசு சஞ்சேசு (María Magdalena González Sánchez) (பிறப்பு: 8, மே, 1974) ஒரு மெக்சிக வானியற்பியலாளரும் அணுக்கரு இயற்பியலாளரும் ஆராய்ச்சியாளரும் ஆவார். இவர் காம்மாக்கதிர் ஆராய்ச்சிப் பங்களிப்புக்காக பெயர்பெற்றவர், இவர் உயர் குத்த்நிலை நீர் செரன்கோவ் செய்முறை நிறுவனத் தலைவராக உள்ளார். இவர் தன் ஆய்வுப் புலத்தில் சுருக்கமும் சுட்டும் வெளியிடும் இதழ்களில் 50 கட்டுரைகளுக்கும் மேலாக வெளியிட்டுள்ளார். இவர் 2015 இல் மெக்சிக தேசிய தன்னாளுகைப் பல்கலைக்கழகத்தின் சோர் யுவானா இனேசு தெ லா குரூசு தகைமையைப் (Reconocimiento Sor Juana Inés de la Cruz) பெற்றுள்ளார்.

வாழ்க்கை[தொகு]

இவர் மெக்சிகோ தேசியத் தன்னாளுகைப் பல்கலைக்கழக வானியல் நிறுவன அறிவியல் புலத்தில் இயற்பியல் துறையில் அணுக்கரு பிரிவில்ல் இளவல் பட்டம்பெற்றார். இவர் விசுகான்சின் மாடிசன் பல்கலைக்கழக த்தின் இலாசு அல்மோசு தாசிய ஆய்வகத்தில் நொதுமி அறிவியல் தொழி;ல்நுட்பக் குழுவில் பணிபுரியும்போது இயற்பியல் சார்ந்த உயராற்றல் வானியற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார்..[1]மெக்சிகோ தேசியத் தன்னாளுகைப் பல்கலைக்கழக வானியல் நிறுவனத்தில் முதுமுனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார். இங்கே இப்போது இவர் முதுநிலை ஆய்வாளராக உள்ளார்.[2]

இவர் மெக்சிகோவில் உள்ள பியூபிளாவில் அமைந்த சீர நேபிரா எரிமலைப் பகுதியில் உயர்குத்துநிலை நீர் செரென்கோவ் செய்முறை காம்மாக்கதிர் நோக்கீட்டகத்தைத் தோற்றுவித்து தொடர்ந்து ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வருகிறார்.[3][4]இவர் மிலாகிரோ செய்முறை நோக்கீட்டகக் கண்டுபிடிப்புகளிலும் இவர் ஒருங்கிணைப்பாளராகவும் பங்கேற்பாளராகவும் செயல்படுகிறார்.[5]

இவரது ஆராய்ச்சியின் ஒரு பகுதி செயற்கைக் கோள் நோக்கிடுகளைப் பயன்படுத்தும் காம்மாக்கதிர் வெடிப்புகளைப் பற்றி அமைகிறது.[1] இவர் இந்த ஆராய்ச்சி வழியாக ஒருவகை மெகாமின்ன்ன் வோல்ட் ஆற்றல் உமிழ்வின் கண்டுபிடிப்பாகும். இது பெர்மி காம்மாக்கதிர் விண்வெளித் தொலைநோக்கியால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவரது அண்மைய ஆய்வுகளாவன: காம்மாக்கதிர் வெடிப்புகளின் உயர் ஆற்றல் உமிழ்வு, மீ ஆற்றல் அண்டக் கதிர்களின் முடுக்கியாக செயல்படும் சென்ட்டாரசு ஏ பற்றிய ஆய்வு, உயர்குத்துநிலை நீர் செரென்கோன் செய்முறை, மிலாகிரா ஆகிய நோக்கீட்டகங்களின் நோக்கீடுகளைப் பயன்படுத்தும் உயர் ஆற்றல் காம்மாக்கதிர் வானியற்பியல்,உயர்குத்துநிலை வளிமண்டல செரென்கோவ் காணிகளை(ஒற்றிகளை) நிறுவுதல் என்பனவாகும்.

இவரது வானியல் நிறுவனப் பணிக்குழு முதுமுனைவர் ஆய்வு மாணவரையும் பிற கல்வி மட்ட மாணவரையும் உயர்குத்துநிலை நீர் செரென்கோன் செய்முறை நோக்கீட்டகக் கல்வியியல் தொழில்நுட்பர்களையும் இணைத்த குழுவாக அமைகிறது.[2]

அறிவியல் பங்களிப்புகள்[தொகு]

மெக்சிகோவில் உள்ள பியூபிளாவில் அமைந்த சீர நேபிரா எரிமலைப் பகுதியில் உயர்குத்துநிலை நீர் செரென்கோவ் செய்முறை காம்மாக்கதிர் நோக்கீட்டகத்தைத் தோற்றுவித்து தொடர்ந்து ஒருங்கிணைத்த இவர் நண்டு ஒண்முகிலுக்கு அடுத்து அமைந்த துடிப்பண்டக் கண்டுபிடிப்பிலும் பங்கேற்றுள்ளார். இந்தக் கண்டுபிடிப்பு புவி அடையும் அண்டக் கதிர்களில் கூடுதலாக அமையும் நேர்மின்னன்கள் அளவை புரிந்து கொள்வதற்கான அரிய தகவல்களைத் தந்துள்ளது.[5]

இவர் ஈர்ப்பலைகளால் கண்டறிந்த இரண்டு நொதுமி விண்மீன்களின் இணைவையும் பல மின்காந்தக் கதிர்வீச்சுகளின் இணைவையும் நோக்கியுள்ளார்.[6]

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

 • 2003: சாதனை விருது, இலாசு அலமவுசு தேசிய ஆய்வகம்
 • 2011: அமெரிக்க இயற்பியல் கழகப் பன்னாட்டு ஆராய்ச்சிப் பயண விருது[7]
 • 2011: இலத்தீன அமெரிக்க, கரீபிய வட்டார இயற்பியல், கணிதவியல் இளம் அறிவியலாளர்களுக்கான எல்சிவியேர் அறக்கட்டளை விருது[8]
 • 2015: மெக்சிக தேசிய தன்னாளுகைப் பல்கலைக்கழகத்தின் சோர் யுவானா இனேசு தெ லா குரூசு தகைமை(Reconocimiento Sor Juana Inés de la Cruz)[9]

வெளி இணைப்புகள்[தொகு]

 1. 1.0 1.1 "Biggest Cosmic Explosions Also May Propel Fastest Objects In Universe". Space Daily (Los Alamos). 2003-08-15. http://www.spacedaily.com/reports/Biggest_Cosmic_Explosions_Also_May_Propel_Fastest_Objects_In_Universe.html. 
 2. 2.0 2.1 "Dra. Ma. Magdalena González Sánchez" (in Spanish). UNAM Institute of Astronomy. http://www.astroscu.unam.mx/IA/index.php?option=com_content&view=article&id=448&Itemid=88&lang=en. 
 3. "UNAM, involucrada en hallazgo astronómico mundial" (in Spanish). El Financiero. 2017-12-28. https://www.elfinanciero.com.mx/universidades/unam-involucrada-en-hallazgo-astronomico-mundial.html. 
 4. Bonilla, Armando (2015-04-21). "Capta observatorio HAWC el mapa más detallado del universo" (in Spanish). México Ciencia y Tecnología (Mexico City). http://www.cienciamx.com/index.php/ciencia/universo/6928-urgente-capta-observatorio-hawc-el-mapa-mas-detallado-del-universo. 
 5. 5.0 5.1 Hüntemeyer, Petra. "Milagro TeV Galactic Unidentified Sources". Los Alamos National Laboratory. http://www.gravity.psu.edu/events/tev_workshop/talks/petra_huentemeyer_tevunid_milagro.pdf. 
 6. Robles, Tania (2017-10-17). "Anuncian descubrimiento de fusión de estrellas de neutrones a partir de ondas gravitacionales" (in Spanish). México Ciencia y Tecnología (Mexico City). http://www.cienciamx.com/index.php/ciencia/universo/18702-descubrimiento-fusion-estrellas-neutrones-ondas-gravitacionales. 
 7. International Research Travel Award Program Grant Recipients. American Physical Society. பக். 6. https://www.aps.org/programs/international/programs/upload/IRTAP-Recipients-through-Cycle-20.pdf. பார்த்த நாள்: 2019-06-05. 
 8. "Eleven Women Scientists Announced as Winners of Elsevier Foundation OWSD Awards". Kuala Lumpur: Elsevier Foundation. 2011-09-29. https://www.elsevier.com/about/press-releases/corporate-social-responsibility/eleven-women-scientists-announced-as-winners-of-elsevier-foundation-owsd-awards. 
 9. "Reconocimiento Sor Juana Inés de la Cruz" (in Spanish). Gaceta (National Autonomous University of Mexico). 2015-03-12. http://www.gaceta.unam.mx/20150312/reconocimiento-sor-juana-ines-de-la-cruz/.