போர் மன்னலிங்கேசுவர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போர் மன்னலிங்கேசுவரர் திருக்கோயில் மங்கலம், திருவண்ணாமலை வட்டம் மற்றும் மாவட்டம்.

திருவண்ணாமலை - வந்தவாசி சாலையில் திருவண்ணாமலையில் இருந்து சுமார் 15 கி.மி தொலைவில் அமைந்துள்ள மங்கலம் என்னும் கிராமத்தில் பேருந்து நிலையத்திற்கு அருகில் இந்த கோயில் அமைந்துள்ளது. கிராம தெய்வமாக உள்ள போர் மன்னலிங்கேசுவரர் மரத் தேரில் வடிவமைக்கப்பட்டிருக்கிறார். நான்கு சக்கரங்கள் கொண்ட அழகிய பீடம் அமைந்த தேரின் மீது நின்ற கோலத்தில் உள்ளார். தனது தலை மீது லிங்கத்தினைத் தாங்கியும் வலது கையில் கத்தியுடன், இடது கை சிம்மத்தின் வாலைப் பிடித்து அடக்குவது போன்றும் அமைக்கப்பட்டுள்ளார்.

போர் மன்னலிங்கேசருக்கு அருகில் உள்ள காளியம்மனுக்குப் பூசைகள் முடிந்த பிறகே இவருக்குப் பூசை செய்யப்படுகிறது. மாசி மாதம் 5 நாட்கள் உற்சவம் நடைபெறுகிறது.