போக்ரா நீர்ப்பாசனக் கால்வாய்
Appearance
போக்ரா நீர்ப்பாசனக் கால்வாய் (Boghra Irrigation Canal) மத்திய ஆப்கானித்தானின் எல்மண்டு மாகாணத்தில் அமைந்துள்ள 155 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு கால்வாய் ஆகும். நகர்-இ புக்ரா என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. எல்மண்டு நதியிலிருந்தும் அர்கந்தாப் நதியிலிருந்தும் விவசாய நிலங்களுக்கு தண்ணீரைத் திருப்ப இக்கால்வாய் உதவுகிறது. 1949 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதியன்று கால்வாய் அமைப்பிற்காக $21 மில்லியன் அமெரிக்க நிதியை ஆப்கானிய அரசாங்கம் பெற்றது.[1] போக்ரா, சாமலோன் மற்றும் மர்சா கால்வாய்கள் 1954 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டன. எல்மண்டு மற்றும் அர்கந்தாப் பள்ளத்தாக்கு ஆணையம் போக்ரா நீர்ப்பாசனக் கால்வாய் திட்டத்தை கட்டுப்படுத்துகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Investigation reports and departmental comments". U.S. Government Printing Office. 1957. பார்க்கப்பட்ட நாள் 14 November 2018.
- ↑ "Studies in Business and Economics, Volume 14, Issue 2". University of Maryland, College Park. Bureau of Business and Economic Research. 1960.