போகோர் தாவரவியல் பூங்கா
போகோர் தாவரவியல் பூங்கா | |
---|---|
Kebun Raya Bogor | |
போகோர் தாவரவியல் பூங்கா | |
வகை | தாவரவியல் பூங்கா |
அமைவிடம் | பொகோர், மேற்கு சாவகம் (தீவு) |
பரப்பளவு | 87 எக்டேர்கள் (210 ஏக்கர்கள்; 0.87 km2) |
உருவாக்கம் | மே 18, 1817 |
நிறுவனர் | Caspar Georg Carl Reinwardt |
இயக்குபவர் | தேசிய ஆய்வு, கண்டுபிடிப்பு முகமை |
நிலை | Open |
பொதுப் போக்குவரத்து | Bogor |
இணையதளம் | kebunraya.id/bogor |
போகோர் தாவரவியல் பூங்கா (இந்தோனேசிய மொழி: Kebun Raya Bogor) என்பது இந்தோனேசியா நாட்டின் நடு ஜகார்த்தாவில் இருந்து, 60 கி.மீ. தெற்கில் போகோர் இல் அமைந்துள்ள தாவரவியல் பூங்கா ஆகும். இது தற்போது தேசிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு நிறுவனம் மூலம் இயக்கப்படுகிறது. இந்த தோட்டம் நகரத்தின் நடுவில் அமைந்துள்ளது. [இஸ்தானா போகோர்]] ஜனாதிபதி மாளிகை வளாகத்தை ஒட்டியுள்ளது. இது 87 எக்டேர்கள் (210 ஏக்கர்கள்) பரப்பளவையும், அதில் 13,983 வெவ்வேறு வகையான மரங்கள், பல்வேறு தோற்றம் கொண்ட தாவரங்களைப் பேணுகின்றனர். போகோரின் புவியியல் நிலை என்பது வறண்ட காலத்திலும் கூட கிட்டத்தட்ட தினமும் மழை பெய்கிறது. எனவே, இப்பூங்காவில் வெப்பமண்டல தாவரங்களை வளர்ப்பதற்கு ஏற்புடைய இடமாகத் திகழ்கிறது. இப்பூங்கா 1817 ஆம் ஆண்டு இடச்சு நிறுவனத்தால் உருவானது. இதனைத் தோற்றுவித்தவர் காசுபர் சியார்சு கார்ல் ரேயன்வார்டு (Caspar Georg Carl Reinwardt) ஆவார்.