பொக்காலி (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேரளத்தின் வெச்சூர் பொக்காலி பதம், (நெல் வயல்கள்) வைகோம்

பொக்காலி அரிசி (மலையாளம் : പൊക്കാളി) ஒரு தனித்துவம் வாய்ந்த உப்புத்தன்மையை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அரிசி வகையாகும். இயற்கை முறையில் எவ்வித ரசாயணமும் இன்றி இப்பயிரானது விளைவிக்கப்படுகிறது.

பயிர் செய்யப்படும் இடம்[தொகு]

தென்னிந்தியாவில் கேரள மாநிலத்தில் ஆலப்புழா, திரிச்சூர், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் 5000 ஹெக்டேர் அளவில் சூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை சாகுபடி செய்யப்படுகிறது.[1] ஏனெனில் இம்மாதங்களில் விளைநிலங்களில் நீரின் உப்புத்தன்மையின் அளவு குறைவாகக் காணப்படும். இப்பயிரானது 130 முதல் 140 செ.மீ. நீளம் வரை வளரக்கூடியது. இப்பயிரானது அக்டோபர் மாத இறுதியில் அறுவடை செய்யப்படுகிறது.

தன்மைகள்[தொகு]

இவ்வகை அரிசியானது மிகவும் சுவையாகவும் அதிக புரதச் சத்தையும் கொண்டுள்ளது; பாஸ்மதி அரிசி போல் நீளமாக இருக்கும்.மேலும் மருத்துவ குணமும் வாய்ந்தது.

சான்றுகள்[தொகு]

  1. "Shrimp, fish and paddy cultivation in same field is lucrative". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2013-06-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொக்காலி_(நெல்)&oldid=3920699" இலிருந்து மீள்விக்கப்பட்டது