பைரவி தேசாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைரவி தேசாய்
Bhairavi Desai
2011 ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று தேசாய்
பிறப்புகுசராத்து, இந்தியா
அறியப்படுவதுநியூயார்க் மகிழ்வுந்து தொழிலாளர்கள் கூட்டணி நிறுவனர்

பைரவி தேசாய் (Bhairavi Desai) அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் சுமார் 15,000 வாடகை வாகன ஓட்டுநர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தொழிற்சங்கமான நியூயார்க் வாடகை வாகன தொழிலாளர் கூட்டணியின் நிறுவன உறுப்பினர் ஆவார்.[1]

கியூபா, பாலசுதீனம் மற்றும் எல் சால்வடோர் போன்ற நாடுகளின் சமூக நீதிக்கான ஒற்றுமை இயக்கங்களுக்காக பாடுபடும் ஒரு சமூக ஆர்வலர் என்றும் அறியப்படுகிறார்.[2]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

தேசாய் இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் பிறந்தார். ஆறு வயதில் தனது பெற்றோருடன் நியூ செர்சியில் உள்ள ஆரிசனுக்கு வந்தார். தந்தை இந்தியாவில் ஒரு வழக்கறிஞராக இருந்தார். ஆனால் வழக்கறிஞர் தொழிலில் வேலை கிடைக்கவில்லை என்பதால் இங்கு ஒரு மளிகைக் கடையில் பணிபுரிந்தார்.[3]

நியூ செர்சியிலுள்ள இரட்கர்சு பல்கலைக்கழகத்தில் பெண்கள் ஆய்வுப்படிப்பில் பட்டம் பெற்றார். தொடர்ந்து நியூ செர்சியில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுடன் பணிபுரியும் தெற்காசிய பெண்கள் அமைப்பில் பணிபுரிந்தார்.

1996 ஆம் ஆண்டில் ஆசிய அமெரிக்க வன்முறைக்கு எதிரான குழுவில் இணைந்து ஆசிய தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் பணியாற்றினார். 1998 ஆம் ஆண்டில் பைரவி தேசாய் மற்றவர்களுடன் இணைந்து 700 தொழிலாளர்களை ஆரம்ப உறுப்பினர்களாகக் கொண்ட நியூயார் வாடகை வாகன தொழிலாளர்கள் கூட்டணியை நிறுவினார்.

பைரவி தற்போது நியூயார்க்கின் நிர்வாகப் பிரிவுகளில் ஒன்றான பிராங்சு பகுதியில் வசிக்கிறார். அங்கு இவரது கணவர் விக்டர் சலாசரும் ஒரு தொழிற்சங்க ஆர்வலராக உள்ளார்.[3]

வாடகை வாகனத் தொழிலாளர்களுடன் பணி[தொகு]

1998 ஆம் ஆன்டு பைரவிக்கு முதல் வெற்றி கிடைத்தது. 30 ஆண்டுகளுக்குப் பின்னர் மஞ்சள்நிற வாகனத் தொழிலாளர்களின் முதல் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 90% நியூயார்க் வாகனத் தொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். நியாயமற்ற விதிமுறைகள், மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஓட்டுநர்களுக்கான உடல்நலக் காப்பீடுகளுக்கு எதிராக வேலைநிறுத்தத்தில் இணைந்தனர். ஆண் ஆதிக்கம் செலுத்தும் தொழிலில் பைரவி ஒரு பெண்ணாக இருந்தாலும் பல வாடகை வாகன ஓட்டுநர்கள் ஓட்டுநர்கள் இவருக்கு மதிப்பு கொடுத்தார்கள்.[4]

பைரவி தேசாயும் வாடகை வாகன ஓட்டுநர்கள் கூட்டணி உறுப்பினர்களும் இணைந்து வாகனங்களின் கூரை விளம்பரங்கள் மூலம் இலாபகரமான வணிகம் செய்வது தொடர்பாக புதிய விதிமுறைகளை (2011) உருவாக்குவதில் ஈடுபட்டனர். பார்வைக்கு அதிகம் புலப்படும் இந்த நடமாடும் விளம்பரங்கள் உரிமையாளர்களுக்கு வருமானத்தை உருவாக்குகின்றன. ஆனால் அவர்களுக்காக வேலை செய்யும் வாகன ஓட்டுநர்களுக்கு வருவாயில் பங்கு இல்லாமல் ஒரு சுமையாகக் கருதப்பட்டது. சமீபத்திய ஆண்டுகளில், வயது வந்தோருக்கான பொழுதுபோக்கு வணிகங்களை ஊக்குவிப்பதன் மூலம் பல கூரை விளம்பர அடையாளங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. புதிய சட்டத்தின்படி, சொந்த வாகனங்களை வைத்திருக்கும் ஓட்டுநர்கள், "நியாயமாக" "பொருத்தமற்றது" என்று கருதக்கூடிய எந்தவொரு விளம்பரத்தின் மீதும் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் இப்போது அனுமதிக்கப்படுகிறது. இந்தச் செயல் மூலம் உரிமையாளர்கள் வாடகை வாகன் ஓட்டுநர்களுக்கு கூரை விளம்பரங்களில் இருந்து வரும் வருவாயில் சிறிதளவை வாகன உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்கான ஒரு படிநிலையாக இருக்கும் என்று பைரவி தேசாய் எதிர்பார்த்தார்.[5]

பிற செயல்பாடுகள்[தொகு]

2005 ஆண்டு பைரவி தேசாய்க்கு போர்டு அறக்கட்டளை தலைமைத்துவம் வழங்கப்பட்டது.[6][7] மார்க்சிய பிரெக்ட் மன்றத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பைரவி தேசாய் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Widdicombe, Lizzie (April 18, 2011). "Thin Yellow Line". The New Yorker. Condé Nast. pp. 72–77. பார்க்கப்பட்ட நாள் 31 July 2011.
  2. "CTL: Sunset".
  3. 3.0 3.1 Wadler, Joyce. "PUBLIC LIVES; An Unlikely Organizer as Cabdrivers Unite", The New York Times, December 8, 1999. Accessed December 30, 2007.
  4. Massey, Daniel. "Where is Bhairavi Desai now?". Archived from the original on 2013-06-01. பார்க்கப்பட்ட நாள் April 2, 2013.
  5. Rosenberg, Noah (16 September 2011). "Some Cabbies Given Right to Say No to Racy Ads". The New York Times: A20. https://www.nytimes.com/2011/09/16/nyregion/some-cabbies-win-right-to-reject-racy-rooftop-ads.html?_r=1&scp=1&sq=Desai&st=cse. பார்த்த நாள்: 20 September 2011. 
  6. Bihari, Atul. "NRI, New York taxi drivers organizer wins Ford Foundation award". பார்க்கப்பட்ட நாள் 2 April 2013.
  7. "2005 Award Recipients". Archived from the original on 22 December 2012. பார்க்கப்பட்ட நாள் 2 April 2013.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பைரவி_தேசாய்&oldid=3403704" இலிருந்து மீள்விக்கப்பட்டது