பேல் மறை குறியீடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேல் தாள்களின் அட்டைப்படம்

பேல் மறை குறியீடுகள் (அல்லது பேல் தாள்கள் ) என்பது மூன்று மறைக்குறியீடுகளின் தொகுப்பாகும், அவை தங்கம், வெள்ளி நகைகள் கொண்ட புதையல் பற்றிய தகவல்களைக் கொண்டவை. இந்த புதையல்களின் மதிப்பு 2018 சனவரியில் 43 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இது மூன்று மறைக்குறியீடுகளை உள்ளடக்கியது, முதல் மறைக்குறியீடு (தீர்வு காணப்பாடதது) புதையல் இருப்பிடத்தையும், இரண்டாவது (தீர்வு காணப்பட்டது) மறைக்குறியீட்டில் புதையலிலின் உள்ளடக்கத்தையும், மூன்றாவது (தீர்வு காணப்படாதது) இந்த புதையலுக்கு உரிமையுடையவர்களின் பெயர்களையும் உள்ளடக்கியது.

மூன்று மறை குறியீடுகளின் கதையானது 1885 களில் வர்ஜீனியாவின் பெட்ஃபோர்ட் கவுண்டியில் ஒரு ரகசிய இடத்தில் தாமஸ் ஜே. பேல் என்ற மனிதரால் புதைக்கப்பட்ட புதையலை விவரிக்கும் ஒரு துண்டுப்பிரசுரத்திலிருந்து உருவானது. தாமஸ் பேல் என்பவர் லின்ச்பெர்க் நகரத்தில் விடுதி நடத்திவரந்த தனது நன்பரான ராபர்ட் மோரிஸ் என்பவரிடம் ஒரு இரும்புப் பெட்டியை (மறைகுறி செய்திகளை கொண்ட) மீண்டும் வந்து வாங்கிக்கொள்வதாக சொல்லி கொடுத்துவிட்டு சென்றார். ஆனால் சென்றவர் மீண்டும் வரவே இல்லை. கதையின்படி, விடுதிக்காரர் 23 ஆண்டுகள் கழித்து பெட்டியைத் திறந்து பார்த்தார். அதில் இருந்த சங்கேத மொழியை புரிந்து கொள்ள இயலாதவராக மோரிசு இருந்தார். பின்னர்  பல தசாப்தங்களுக்குப் பிறகு இந்த மூன்று மறைக்குறியீடுகளை மோரிஸ் இறப்பதற்கு முன்பு அவரது நண்பருக்கு கொடுத்தார். நண்பர் தனது வாழ்க்கையின் அடுத்த இருபது ஆண்டுகளை அந்த சங்கேத செய்திகளை அறிந்து கொள்ள முயன்றார். இதில் இரண்டாவது தாளில் உள்ள குறியீடுகளை மட்டுமே அவரால் படித்தறிய முடிந்தது. அதில் புதையலில் என்னென்ன இருக்கின்றது என்பது அதன்மூலமாக அறிய முடிந்தது. ஆனால் புதையல் இருக்கும் இடம்குறித்தோ அல்லது பிற விவரங்களையோ அவரால் படித்தறிய முடியவில்லை. பின்னர் பேல் காகிதங்களை அவர் ஜேம்ஸ் வாட் என்ற என்பவரிடம் ஒப்படைத்தார். ஜேம்ஸ் அந்த மூன்று மறைக்குறியீடுகளையும் ஒரு துண்டுப்பிரசுரமாக வெளியிட்டார், இது 1880 களில் விற்பனைக்கு வெளி வந்தது.

துண்டுப்பிரசுரம் வெளியானதிலிருந்து, மீதமுள்ள இரண்டு மறைக்குறியீடுகளை படித்தறியவும், புதையலைக் கண்டுபிடிப்பதற்கும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் எல்லா முயற்சிகளும் தோல்வியடைந்தன. [1] [2]

புதையல் தொடர்பான ஒவ்வொரு விசயமும் பொய் என்று சிலர் வாதிடுகின்றனர். என்றாலும் இதை நம்புரவோர் பலரும் உள்ளனர். [1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேல்_மறை_குறியீடுகள்&oldid=3521208" இருந்து மீள்விக்கப்பட்டது