பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005
இயற்றியதுஇந்திய நாடாளுமன்றம்

பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 (Disaster Management Act, 2005) என்பது இந்தியாவில், 2004 ஆம் ஆண்டில் சுனாமியால் ஏற்பட்ட எண்ணற்ற உயிர்ப்பலிகளையும், பொருட்சேதங்களை கணக்கில் கொண்டு, இந்தியாவில் பேரிடர் காலங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்திய நாடாளுமன்றம் 2005-இல் இச்சட்டத்தை இயற்றியது.[1][2] 9 சனவரி 2006-இல் இச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தின் கீழ் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் நிறுவப்பட்டது.

தேசிய பேரிடர் மேலாணமை ஆணையம்[தொகு]

இச்சட்டத்தின் பிரிவு -3 (1)-இன் கீழ், 27 செப்டம்பர் 2006-இல் நிறுவப்பட்ட தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின்[3] தலைவராக இந்தியப் பிரதமரும் மற்றும் துணைத்தலைவர் உள்ளிட்ட 9 உறுப்பினர்களும் இருப்பர்.[4] இந்த உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.[5]

இச்சட்டத்தின் பிரிவு 6-இன் கீழ் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் கொள்கை வகுத்தல், திட்டமிடல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கும்.[1]

தேசிய செயற்குழு[தொகு]

இச்சட்டத்தின் பிரிவு 8-இன் கீழ் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு உதவிட இந்திய அரசின், உள்துறை அமைச்சக செயலர் தலைமையில் வேளாண்மை, இராணுவம், குடிநீர் வழங்கல், சுற்றுச் சூழல் மற்றும் வனம், நிதி, சுகாதாரம், எரிசக்தி, மின்சாரம், ஊரக வளர்ச்சி, அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், தொலைத்தொடர்பு அமைச்சகங்களின் இந்திய ஆட்சிப் பணி செயலாளர்கள் கொண்ட தேசிய செயற்குழு உள்ளது.[1] ஆண்டுதோறும் இந்திய அளவில் பேரிடர் மேலாண்மை குறித்த திட்டமிடுவது, இச்செயற்குழுவின் பணியாகும்.[1][2][6]

மாநில அளவிலான பேரிடர் மேலாண்மை ஆணையம்[தொகு]

இச்சட்டத்தின் பிரிவு 22-இன் கீழ் இந்திய மாநிலங்கள் அளவில் முதலமைச்சர்கள் தலைமையில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் செயல்படும். மாநில பேரிடர் ஆணையத்தின் உறுப்பினர்களாக மாநில அமைச்சர்கள் இருப்பர். மாநில ஆணையத்திற்கு உதவிட மாநிலத் துறைகளின் அரசுச் செயலாளர்களின் செயற்குழு செயல்படும்.[1]

மாவட்ட அளவிலான பேரிடர் மேலாண்மைக் குழு[தொகு]

இச்சட்டத்தின் பிரிவு 25-இன் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் பேரிடர் மேலாண்மைக் குழு செயல்படும். மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட பேரிடர் ஆணையக் குழுவில் உறுப்பினர்களாக இருப்பர்.

தேசியப் பேரிடர் மீட்புப் படை (NDRF)[தொகு]

இச்சட்டத்தின் பிரிவு 44–45 கீழ் இந்திய அரசு நியமிக்கும் தலைமை இயக்குநர் தலைமையில் பல்துறை நிபுணர்கள் கொண்ட தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் செயல்படும்.[1] செப்டம்பர், 2014-இல் காசுமீர் எல்லைப்புறத்தில் ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படை ஆற்றிய பணி இந்திய அரசு விருது வழங்கியது.

சட்டத்தின் பிற அம்சங்கள்[தொகு]

1995-இல் நிறுவப்பட்ட தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் இச்சட்டத்தின் பிரிவு 42-இன் கீழ் இயங்கும்.[7]

சட்டம் தொடர்பான விமர்சனங்கள்[தொகு]

பேரிடர் மேலாண்மை ஆணையங்களில் அதிகார வர்க்கத்தினர் மட்டுமே உறுப்பினர்களாக கொண்டுள்ளனர் என்றும், பொதுத்தொண்டு நிறுவனங்களுக்கு இடமளிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் உள்ளது.[7]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Parliament of India (23 December 2005). "Disaster Management Act, 2005, [23rd December, 2005.] NO. 53 OF 2005" (PDF). Ministry of Home. Archived from the original (PDF) on 29 January 2016. பார்க்கப்பட்ட நாள் 30 July 2013.
  2. 2.0 2.1 Aparna Meduri (2006). "The Disaster Management Act, 2005". The ICFAI Journal of Environmental Law. The ICFAI University Press. pp. 9–11. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 30 July 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Ministry of Home (27 செப்டெம்பர் 2006). "Notification for establishing NDMA," (PDF). The Gazette of India (in English and Hindi). Ministry of Home. Archived from the original (PDF) on 4 ஆகத்து 2013. பார்க்கப்பட்ட நாள் 30 சூலை 2013.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. Ministry of Home (27 September 2006). "The Gazette of India, Extraordinary, [Part II, Section 3(i)] Notification: Disaster Management( Terms of office and Conditions of Service of members of the National Authority and payment of Allowances to members of Advisory Committee) Rules, 2006" (PDF). Published by the controller of Publications, New Delhi 110054. p. Section 3. Archived from the original (PDF) on 29 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 20 July 2013.
  5. "Notification for notifying the Disaster Management (Removal of Difficulties) Order. 2006 Providing for a tenure of 5 years for the Member of NDMa" (PDF). The Gazette of India (in English and Hindi). Ministry of Home. 27 செப்டெம்பர் 2006. Archived from the original (PDF) on 3 பெப்பிரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 30 சூலை 2013.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  6. Ministry of Home (27 செப்டெம்பர் 2006). "Notification for constituting National Executive Committee (NEC)" (PDF). The Gazette of India. Ministry of Home. p. Section 3, sub section (ii). Archived from the original (PDF) on 3 பெப்பிரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 30 சூலை 2013.
  7. 7.0 7.1 Max Martin (8 February 2007). "DISASTER MANAGEMENT ACT Farce follows disaster". பார்க்கப்பட்ட நாள் 30 July 2013.

வெளி இணைப்புகள்[தொகு]