பேய்க்காஞ்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேய்க்காஞ்சி என்னும் துறைப் பாடல் புறநானூற்றுத் தொகுப்பில் ஒன்று உள்ளது. புறநானூறு 281 இது காஞ்சித்திணையின் துறை.

போரில் வேந்தனைக் காப்பாற்றிய வீரன் புண் பட்டுக் கிடக்கிறான். இவன் புண்ணைப் பேய் அணுகாவண்ணம் காப்பாற்ற வேண்டும். பழம் தரும் இரவந்தழையும், வெப்பந்தழையும் இல்லத்தில் செருகுவோம். கொம்பு ஊதுவோம். யாழ் இசைப்போம். பல இசைக்கருவிகள் முழக்குவோம். இவன் நெற்றியில் மைப் பொட்டு வைப்போம். ஐயவி என்னும் வெண்சிறு கடுகை இவனைமேல் தூவுவோம். ஆம்பல் குழல் ஊதுவோம். மணி அடிப்போம். காஞ்சிப் பண் பாடுவோம். நறுமணப் பொருள்களைப் புகையச் செய்வோம். [1]

  • புண்ணை ஆற்றும் மருத்துவமும், புண் பட்டவனுக்கு ஆறுதலுமாக இச் செயல்கள் அமையும்.

தொல்காப்பியம், [2] புறப்பொருள் வெண்பாமாலை [3] ஆகிய இலக்கண நூல்கள் இதனைக் குறிப்பிடுகின்றன.

அடிக்குறிப்பு[தொகு]

  1. அரிசில் கிழார் பாடல், புறநானூறு 281
  2. இன் நகை மனைவி பேஎய் புண்ணோன்
    துன்னுதல் கடிந்த தொடாஅக் காஞ்சியும் (தொல்காப்பியம் புறத்திணையியல் 19)
  3. பிணம் பிறங்கிய களத்து வீழ்ந்தாற்கு
    அணங்கு ஆற்ற அச்சுறீஇயன்று. (புறப்பொருள் வெண்பாமாலை 77)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேய்க்காஞ்சி&oldid=1268033" இருந்து மீள்விக்கப்பட்டது