பேட்ரிக் சோதனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேட்ரிக் சோதனை (Patrick's test) அல்லது பேபர் சோதனை என்பது இடுப்பு மூட்டு அல்லது பின் இடுப்பு மூட்டு நோயினை மதிப்பீடு செய்ய மேற்கொள்ளப்படும் மருத்துவச் சோதனை ஆகும்.[1][2]

இந்தச் சோதனையின் போது காலை வளைத்து தொடையின் வெளிப்புறமாகச் சுழற்றி சோதனை செய்யப்படுகிறது. இச்சோதனையின்போது முன்புறமாகப் பக்கத்தில் வலி ஏற்பட்டால், அதே பக்கத்தில் இடுப்பு மூட்டுக் கோளாறு இருப்பதாக அறியப்படுகிறது. பின் இடுப்பு மூட்டைச் சுற்றி பின்பக்கமாக எதிரெதிர் பக்கத்தில் வலி ஏற்பட்டால், மூட்டுச் செயலிழப்பினால் ஏற்படும் வலி என அறியப்படுகிறது.[3]

வரலாறு[தொகு]

பேட்ரிக் சோதனைக்கு அமெரிக்க நரம்பியல் நிபுணர் ஹக் டால்போட் பேட்ரிக் நினைவாகப் பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Görtz, Simon; Fricka, Kevin B.; Bugbee, William D. (2015). "The hip". Rheumatology. பக். 626. doi:10.1016/B978-0-323-09138-1.00076-0. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780323091381. 
  2. Faber Test | Patrick Faber's Test for Hip Pain Available from:https://www.youtube.com/watch?v=nFza4MJv2Uo
  3. Broadhurst NA, Bond MJ. Pain provocation tests for the assessment of sacroiliac joint dysfunction. Journal of Spinal Disorders. 1998 Aug;11(4):341-5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேட்ரிக்_சோதனை&oldid=3750713" இலிருந்து மீள்விக்கப்பட்டது