பேச்சு:2020 தமிழ்நாட்டில் கொரோனாவைரசுத் தொற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்நாட்டில் தொற்றுப் பரவல்[தொகு]

இந்த பத்தியில் தப்லீக் குழுவினரை கொரோனா தொற்று சோதனை செய்வதற்கு அரசு சிரமம் அடைந்தது என்றும், இந்தியாவில் பெரும் தொற்று இந்த குழுவினரால் ஏற்பட்டது என்றும் எழுதப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சோதனை செய்வதில் சிரமம் இருந்தது உண்மை தான். பிறகு அப்போதையை சுகாதாரதுறை செயலாளர் அம்மையார் பீலா ராஜேஷ் அவர்கள் தப்லீக் குழுவினர் முழுமையாக ஒத்துழைத்தனர் என்றும் அவர்களின் எத்துனை நபர்களுக்கு சோதனை செய்யபட்டது என்றெல்லாம் தெளிவான தினசரி அறிக்கை அளித்தார். மேலும் தமிழகத்தில் தப்லிக் குழுவை தவிர்த்து கொரோனா தொற்று (hotspot) என்று கோயம்பேடு, சென்னையில் தனியார் மால் ஒன்றும்(பெயரை குறிப்பிட தவிர்க்கிறேன்) இருந்தது. கட்டுரையில் சார்பற்றவாறு அமைப்பது விக்கிபீடியாவின் தரத்தை உயர்த்தும். --Yousufdeen (பேச்சு) 15:47, 27 செப்டம்பர் 2020 (UTC)