பேச்சு:ஹளேபீடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு மாற்றம்[தொகு]

இக் கட்டுரையின் தலைப்பு ஹளபீடு என்றிருக்கின்றது. ஆனால் தொடக்கத்தில் ஹளேபீடு என்ற சரியான உச்சரிப்பிலே இருந்திருக்கின்றது. கன்னடத்தில் ஹளேபீடு என்றால் தமிழில் பழையவீடு என்று பொருள்படும். மலையாளம், மராத்தி, ஆங்கிலம் ஆகிய விக்கிபீடியாக்களிலும் ஹளேபீடு என்று தான் உச்சரிக்கப்பட்டுள்ளது, ஆனால் எவ்வித காரணமுமின்றி, எவ்வித உரையாடலுமின்றி பயனர் ஒருவர் தன்னிச்சையாக ஹளபீடு என்று மாற்றியிருக்கின்றார். கன்னட மூல உச்சரிப்பான ஹளேபீடு என்பதற்கே மீண்டும் மாற்றம் செய்யுமாறு விண்ணப்பிக்கின்றேன். --விண்ணன் (பேச்சு) 02:24, 28 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

கடவுள் பெயர்கள்[தொகு]

இக் கட்டுரையில் சில பெயர் மாற்றங்களைச் செய்தனன். ஹளேபீடு என்பதன் தமிழ் வடிவமான பழையவீடு என்பதைச் சேர்த்திருக்கின்றேன். அதே போல, பிரம்மா, விஷ்ணு ஆகிய சாங்கதப் பெயர்களின் தமிழ் வடிவமான பரமன்[1], விண்ணன்[2] ஆகியவற்றை இணைத்திருக்கின்றேன்.--விண்ணன் (பேச்சு) 02:42, 28 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஹளேபீடு&oldid=1905363" இலிருந்து மீள்விக்கப்பட்டது