பேச்சு:வின்க்கிரிசுட்டீன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செல்வா! alkaloid = காரப்போலி (அ) காரகம் [1] என்ற கலைச்சொல்லைப் பயன்படுத்தலாம் என்று எண்ணுகிறேன். கலைச்சொற்களைத் தனியான தலைப்பில் கொடுத்துள்ளேன் (இப்பக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கலைச்சொற்கள்). நித்யகல்யாணி என்ற பெயரும் சுடுகாட்டு மல்லிக்கு உண்டு. மேலும், பீநாறி என்ற பெயர் Premna tomentosa- விற்கும் உண்டு [2] என்பதால் சுடுகாட்டு மல்லி என்ற பெயரையே பயன்படுத்தியுள்ளேன்.--பரிதிமதி 05:17, 1 மே 2010 (UTC)[பதிலளி]

காரப்போலி என்னும் சொல் மிக நல்ல சொல். -oid என்று முடியும் சொற்களுக்குப் பயன்படுத்துவதுண்டு. "அனை" என்றாலும் போன்ற அல்லது தொடர்பான என்னும் பொருள்தரும். என்னனைய என்றால் என்னைப் போன்ற (like, kind) என்று பொருள் தரும். என்று ஆகவே காரனை என்றும் சொல்லலாம். பொதுவாக -oid என்று முடியும் சொற்களுக்கு -அனை அல்லது -போலி போன்ற சொற்களைப் பயன்படுத்தலாம். தமிழில், அன = ஒப்பான; அனை = அத்தன்மை; அனைய = அன்ன , அத்தன்மையான. metaloid = மாழைப்போலி (மாழையைப் போல்வன). மாழையனை என்றும் கூறலாம். எனவே கட்டாயம் காரப்ப்போலி எனலாம், ஆனால் ஆல்க்கலி (Alkali) என்னும் சொல்லில் இருந்து பெற்றிருந்தாலும் ஆல்க்கலாய்டு என்பது நைதரசன் உள்ளதான காரவேதிப்பொருளாக இருத்தல் வேண்டும். உயிரியல் அகரமுதலி (எலிசபெத் மார்ட்டின், ராபர்ர்ட் ஃகைன்), ஆல்க்கலாய்டு என்பதை கீழ்க்காணுமாறு குறிக்கின்றது:

alkaloid One of a group of nitrogenous organic compounds derived from plants and having diverse pharmacological properties. Alkaloids include morphine, cocaine, atropine, quinine, and caffeine, most of which are used in medicine as analgesics or anaesthetics. Some alkaloids are poisonous, e.g. strychnine and coniine, and colchicine inhibits cell division.
எனவே நைதரசக் காரனை அல்லது நைதரசக் காரப்போலி எனலாம். வெறும் காரப்போலி அல்லது காரனை என்றும் கூறலாம், தவறில்லை என்றே நினைக்கின்றேன். இந்த ஆல்க்கலாய்டு என்னும் சொல்லை ஆங்கிலேயர்கள் 1824 இல் இருந்துதான் பயன்படுத்துகின்றார்கள். முதன்முதலில் லான்செட் என்னும் மருத்துவ ஆய்விதழில் பயன்படுத்தினார்கள் (Lancet 13 Nov. 212/4) (நன்றி: ஆக்ஃசுவோ'ர்டு அகரமுதலி). இந்த லான்செட் என்னும் மருத்துவ ஆய்விதழ் ஆங்கிலத்தில் வெளிவரும் மருத்துவ ஆய்விதழ்களிலேயே மிகப்ப்பழமையானது (1823 இல் தொடங்கினார்கள். இன்றும் சிறப்போடு வெளிவருகின்றது) --செல்வா 13:41, 1 மே 2010 (UTC)[பதிலளி]

போலி - அனை ஆகிய இரண்டுக்கும் சிறு வேறுபாடு உண்டு. போலி என்பது போன்றது, போல்வன என்று பொருள் தரும்பொழுது மிகச்சரியாக இருக்கும். ஆனால் போலி என்பதற்கு பார்ப்பதற்கு ஒன்றுப்போல் இருந்தாலும் (முற்றிலும்) வேறானது என்றும் பொருள் தரும். போலி என்றால் ஏமாற்றானது (pseudo, mimic) என்பது போன்ற பொருளும் தரும். இதனால் போலி என்பது பொருந்தாது என்று சொல்லவில்லை. தொடர்பான கருத்தைப் பதிவு செய்கின்றேன்.
பின்னொட்டாய் -oid என்று முடியும் சில ஆங்கிலச் சொற்களுக்கு ஈடாக போலி, அனை என்பது போல போல்ம(ம்), போன்மம் என்றும் கூறலாம். போன்மி என்றும் சொல்லலாம். இப்படிச் சொலதால் 'ஏமாற்று, பொய்மை" முதால கருத்துகள் நெருடாமல் இருக்கும். போலி என்பது சுருக்கமான சரியான சொல்லே. மாற்றாக சில சொற்களும் இருப்பதும் உதவும். போன்மி, போன்மம் என்னும் சொற்கள் அறிவியல், பொறியியலில் வழங்கும் model என்பதற்கும் பொருந்தும். ஒப்புரு, போன்மி, போன்மம் ஆகியவை மாடல் என்பதற்கு ஈடாகவும் பயன்படும். --செல்வா 22:55, 1 மே 2010 (UTC)[பதிலளி]
  • தமிழில் சாற்றுதல் என்றால் விளம்பரப்படுத்தல், விற்றல் என்றும் பொருள் (பார்க்க கழகத் தமிழ் அகராதி; சென்னை அகரமுதலி விளம்பரப்படுத்தல் என்னும் பொருள் தந்தாலும் விற்றல் என்னும் பொருள் தரவில்லை.) சாற்றுதல் என்பது கூவி விற்றலுக்குமான பொருள். --செல்வா 14:30, 1 மே 2010 (UTC) அதாவது சந்தையிடுதல், சந்தையேற்றல், சந்தை சாற்றல் என்பன marketing, marketize போன்ற சொற்களுக்கு பயன்படும். புதிய ஆங்கிலச்சொல்லை ஏற்பது போல தமிழ்ச்சொல்லையும் ஏற்கும் மனப்பாங்கு ஏற்பட்டால் சாற்றல் என்னும் சொல் market (verb) என்பதற்கு ஈடாகப் பயன்படுத்தலாம் (அதாவது சந்தை என்னும் முன்னொட்டு இல்லாமலே).சாற்று = market (verb).--செல்வா 14:35, 1 மே 2010 (UTC)[பதிலளி]
  • மிகவும் ஆழ்ந்து பார்த்து கருத்து கூறியுள்ள செல்வாவிற்கு நன்றி. (நைதரசக்) காரனை என்பது காரப்போலியை விடவும் சிறப்பான சொல்லாகத் தோன்றுகிறது. எனினும், காரப்போலி என்ற சொல் தமிழிணையப் பல்கலைக்கழக அகரமுதலியிலிருந்து எடுக்கப்பட்டதால் அதற்கு ஒரு அதிகாரத்தன்மை உள்ளது; நிற்க. alkaloid -Natural bases containing nitrogen found in plants என்று Wordwebonline [3]- இல் கொடுக்கப்பட்டுள்ளது; இலவண வாயுவை உள்ளடக்கிய, தாவரங்களில் காணப்படும் இயற்கையான காரங்கள் என்று பொருள் வருகின்றது; மேலும், IUPAC Gold Book- இல் Basic nitrogen compounds (mostly heterocyclic) occurring mostly in the plant kingdom (but not excluding those of animal origin) என்று கொடுக்கப்பட்டுள்ளது; அதாவது, பொதுவில் தாவரங்களில் காணப்படுவதால் தாவரக்காரம் அல்லது இயற்கைக்காரம் என்ற மாற்றுச் சொற்களையும் இங்கு மாற்றாகக் கூற விரும்புகிறேன். --பரிதிமதி 08:51, 2 மே 2010 (UTC)[பதிலளி]

மேற்கோள்கள்[தொகு]

"alkaloid" A Dictionary of Biology. Elizabeth Martin and Robert Hine. Oxford University Press, 2008. Oxford Reference Online. Oxford University Press. University of Waterloo. 1 May 2010 <http://www.oxfordreference.com.proxy.lib.uwaterloo.ca/views/ENTRY.html?subview=Main&entry=t6.e143>