பேச்சு:வர்ணம் (இசை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தக் கட்டுரையைப் புரிந்து கொள்ள எனக்கு கடினமாக இருக்கிறது. இசையறிவு துளியும் இல்லாதது காரணம். இக்கட்டுரைகள் கவனித்து வரும் செல்வா, கனகு ஆகியோர் இக்கட்டுரைகளில் தகுந்த இடங்களில் எளிய தமிழ்ச் சொற்கள் கொண்டும் எழுதியும் உள்ளிணைப்புகள் தந்தும் விக்கியாக்கம் செய்யுமாறு வேண்டுகிறேன். சிந்து, நீங்கள் எழுதிய கட்டுரைகள் குறித்த சொற்கள் உங்கள் பிற கட்டுரைகளில் வரும்போது அவற்றுக்கு உள்ளிணைப்புகள் தரவும். தொடக்க நிலை பயனர்கள் உங்கள் கட்டுரையை எளிதில் புரிந்து கொள்ள இது உதவும். உங்கள் பல கட்டுரைகள் உள்ளிணைப்புகள் இன்றி இருக்கின்றன. இதை நீங்களே சரிசெய்து விடுவது எளிதாக இருக்கும். ஏனெனில் வழக்கமாக விக்கியாக்கம் செய்யும் நான், சிவா போன்றோர் உங்கள் கட்டுரைத் தலைப்புகளை நினைவில் வைத்திருக்க சிரமப்படலாம் (இத்துறை குறித்த அறிமுகம் இல்லாததால்).நன்றி.--ரவி 14:02, 15 அக்டோபர் 2006 (UTC)[பதில் அளி]

கோபி, சிந்து, நீங்கள் விடாது நிறைய இசை பற்றி எழுதி வாருங்கள். எப்படி இருந்தாலும் திருத்திக்கொள்ளலாம். நல்ல பயனுடைய கட்டுரைகள். எனது பாராட்டுக்கள்! அப்பியாசம் என்பதை பயிற்சி என்றும், அபிவிருத்தி என்பதை வளர்ச்சி என்றும் சொல்லுவது எளிது மட்டுமில்லை, வளம் சேர்ப்பதும் ஆகும், பரவலாக எல்லோருக்கும் புரியும் படியாகவும் இருக்கும். இப்படியாக சில சொற்களையும், மொழி நடையையும் சிறிதளவு மாற்ற வேண்டும் என்பது என் கருத்தும் ஆகும். செல்வா

செல்வா, உண்மையில் எனது இசையறிவு பூச்சியமாகும். சிந்துவினால் விக்கியாக்கம் செய்ய முடிவதில்லையாதலால் சிறு மாற்றங்களைச் செய்து வருகிறேன். அவ்வளவே. நன்றி. --கோபி 19:28, 2 நவம்பர் 2006 (UTC)[பதில் அளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வர்ணம்_(இசை)&oldid=2203389" இருந்து மீள்விக்கப்பட்டது