பேச்சு:லிகோபீன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

lycopene என்னும் இச்சொல்லை லைக்கோப்பீன் என்று தமிழில் எழுத்துப் பெயர்க்க வேண்டும். ஒலிப்பை இங்கே பார்க்கவும். தமிழில் லிகோபீன் என்று எழுதினால் அதன் ஒலிப்பு ligohbeen என்பதாகும். கோ என்னும் எழுத்துக்கு முன்னே க் இல்லை என்றால் G என்பதுபோல ஒலிக்கும். அதே போல பீ என்னும் எழுத்துக்குமுன்னால் ப் இல்லை எனில் Bee என்று ஒலிக்கும். நாம் இங்கு ஆங்கிலச்சொல்லை ஒலிபெயர்க்கின்றோம் அல்லவா? Psychology என்னும் சொல்லை எழுத்துப்பெயர்ப்பதில்லை, ஒலியைத்தான் பெயர்க்கின்றோம். அதுபோலவே. லிக்கோப்பீன் என்று நீங்கள் எழுதியிருந்தால், முதல் அசையைத் தவிர மற்றதெல்லாம் சரியானதாக இருக்கும். தமிழ் ஊடகங்கள் செய்யும் பெரும் பிழைகளில் இதுவும் ஒன்று. Open என்பதை ஓபன் என்பர் ஓப்பன் என்பதற்கு மாறாக. ஓபன் என்றாஅல் Oban என்று ஒலிக்கும். லைக்கோப்பீன் என்னும் சொல்லை 1929 ஆம் ஆண்டுதான் ஆங்கிலத்தில் பயன்படுத்தத் தொடங்கி உள்ளார்கள். --செல்வா 04:00, 30 ஜூலை 2010 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:லிகோபீன்&oldid=566343" இலிருந்து மீள்விக்கப்பட்டது