பேச்சு:லா. ச. ராமாமிர்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நூல்களின் பட்டியல்[தொகு]

டொராண்ட்டோ பல்கலையின் மின்னியல் பேரா. பசுபதி அவர்கள் தந்த குறிப்பின் படி லா.ச.ரா படைத்த கீழ்க்காணும் நூல்களைக் கட்டுரையில் சேர்த்துள்ளேன். நன்றி. பேரா.பசுபதி அவர்களுக்கு. நூல்கள்:

நேசம், மீனோட்டம், இதழ்கள், தயா, உத்தராயணம், ஜனனி, பச்சைக் கனவு, அபிதா, என் பிரியமுள்ள சினேகிதனுக்கு, அலைகள், பாற்கடல், அஞ்சலி, அவள், சிந்தாநதி, கல் சிரிக்கிறது, பிராயச்சித்தம், த்வனி, கங்கா, விளிம்பில், கழுகு, அலைகள் ஓய்வதில்லை, நான், சௌந்தர்ய,புத்ர --செல்வா 02:23, 1 மார்ச் 2010 (UTC)

பட்டியலில் இருந்த நூல்களை வடிவ, பொருள் அடிப்படையில் வகை பிரித்திருக்கிறேன்.--அரிஅரவேலன் (பேச்சு) 06:51, 20 ஆகத்து 2012 (UTC)

சொற்பயன்பாடு[தொகு]

எண்ணற்ற நூல்களை எழுதியிருக்கிறார் என்பதில் உள்ள எண்ணற்ற என்னும் சொல்லை பல என மாற்றியிருக்கிறேன். இத்துணை என எண்ணிக் கூறமுடியாதவைக் குறிப்பிடும் பொழுதே எண்ணற்ற என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். லா.ச.ரா.வோ எண்ணிக் கூறிவிடக்கூடிய அளவில்தான் நூல்களை எழுதியிருக்கிறார்; ஆனால் எத்துணை நூல்கள் என உறுதியாகத் தெரியாத நிலையில் பல என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம். --அரிஅரவேலன் (பேச்சு) 06:51, 20 ஆகத்து 2012 (UTC)