உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ரொஜர் பெடரர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரொஜர் பெடரர் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
ரொஜர் பெடரர் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

Untitled

[தொகு]

இவருடைய பெயர் ரோகர் ஃபெடரர் என்றும் இருக்கலாம், ஏனெனில் இவர் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்தவர். இடாய்ச்சு மொழியில் மெல்லொலி சகரம் கிடையாது (ஜ கிடையாது). ஆங்கிலத்தில் மெல்லொலி சகரத்துடன் கூறுவதை நன்கு அறிவேன். அப்படி மெல்லொலி சகரம் போன்ற ஒலிப்பு வர வேண்டும் எனில், ரோச்யர் என்றும் எழுதலாம். ரோச்சர் என்றாலும் ஒன்றும் பெரிய வேறுபாடு இராது. எனவே ரோகர் (அல்லது உரோகர்), ரோச்சர், ரோச்யர் என்பதின் ஒன்றை முதற்பெயராக எழுதலாம். தாஜ் மகால் என்னும் சொல்லை 3-4 முறை சொல்லிப்பாருங்கள். அதில் ஜ் என்னும் ஒலிக்கு அடுத்து உகர ஒலி வருவதைக் காணலாம். தமிழர்கள் மிக நுட்பமாக உணர்ந்து கூறிய எளிய முறைகளை இங்கு பேணுவது நல்லது. தாச்சு மகால் என்று 3-4 முறை சொல்லிப்பாருங்கள். பெரிய ஒலிப்பு வேறுபாடு இராது (சிறு ஒலிப்பு வேறுபாடு இருக்கும், ஆனால் அது மொழிக்கு மொழி இருப்பதே; ஆங்கிலேயர் டேஆஜ் மெஃகால் என்றும் இன்னும் வெவ்வேறு விதமாகவும் கூறக்கேட்கலாம். எனவே ஒலிப்புத்துல்லியம் என்பதை, அதுவும் வேற்று மொழிச் சொற்களின் ஒலிப்புத்துல்லியத்தை அளவுக்கு மீறி வலியுறுத்துவது பொருந்தாது). இடாய்ச்சுலாந்திலோ, சுவிட்சர்லாந்திலோ வாழ்பவர்கள் ரோச்யர் ஃவெடரர் அவர்களின் பெயரை எப்படி ஒலிக்கின்றார்கள் (பலுக்குகின்றார்கள்) என்று யாரேனும் கேட்டு எழுத வேண்டுகிறேன். சந்திரா, கலை, போன்றவர்கள் உதவக்கூடும்.--செல்வா 13:54, 3 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ரொஜர்_பெடரர்&oldid=4027894" இலிருந்து மீள்விக்கப்பட்டது