பேச்சு:மேல்நாட்டுச் செந்நெறி இசை
Jump to navigation
Jump to search
செவ்வியல் என்பது கூடப் பொருந்துமா? --Natkeeran 19:49, 12 டிசம்பர் 2008 (UTC)
- Classical என்பதற்கு செந்நெறி, செவ்வியல், செவ்வழி போன்ற பல சொற்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. செவ்வியல் என்பது கற்கைத்துறையொன்றின் பெயர்போல இருப்பதால் நான் "செந்நெறி" என்பதையே பெரும்பாலும் பயன்படுத்துகிறேன். எது கூடுதல் பொருத்தம் என்று எனக்குத் தெரியவில்லை. மயூரநாதன் 19:58, 12 டிசம்பர் 2008 (UTC)
- செவ்விசை என்று கூறலாம். செவ்விய இசை செவ்விசை. செம்மை ஏறிய இசை, செழிப்புற்ற இசை என்றெல்லாம் பொருள் கொள்ளும் செவ்விசை பொருத்தமாக இருக்கும். இந்தியச் செவ்விசை, நிப்பானியச் செவ்விசை, மேற்குலகச் செவ்விசை, மேலைச் செவ்விசை, தென்னிந்தியச் செவ்விசை, வட இந்தியச் செவ்விசை, இந்தியச் செவ்விசை என்பன பொருத்தமாக உள்ளன. செந்நெறி இசை என்பது பொருத்தமான சொல் என்றாலும், சற்றே நீளமாக உள்ளது. மற்றபடி குறையொன்றும் இல்லை. Symphony என்பதற்கு செவ் ஒத்திசை, செம் சேர்ந்திசை (செஞ்சேர்ந்திசை), அல்லது சுருக்கமாக ஒத்திசை என்றும் கூறலாம்.--செல்வா 20:10, 12 டிசம்பர் 2008 (UTC)
- இக்கட்டுரையின் தலைப்பை மேற்குலக செவ்விசை (Western classical music) என பெயர்மாற்றம் செய்யலாமா?--செல்வா 19:18, 24 டிசம்பர் 2008 (UTC)