பேச்சு:முகவீணை

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நான் அறிந்த வரையில் முகவீணை என்பது மோர்சிங் எனப்படும் இசைக்கருவியே. தெரிந்தவர்கள் யாரேனும் சரியான விளக்கம் தரவும். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 06:22, 10 சூன் 2012 (UTC)Reply[பதில் அளி]

  • முகவீணை/கட்டைக்குழல்/சிறிய நாகசுரம்/ஷெனாய்/Indian clarinet ஒன்றே.
ஷெனாய் என்பது,வட இந்தியாவில் மங்களவாத்தியம்.தென்னிந்தியாவின் நாதஸ்வரம் போல மதிக்கப்படுகிறது. ஆனால், தென்னிந்தியாவிலோ, ஷெனாய் சோகத்தையே அதிகமாக நிலைநாட்டுகிறது.இதற்கு விதிவிலக்குகளை அளிப்பவர், வழக்கம் போல, இளையராசா. இராசா, இராசா தான்.மேதமை மிகு.இளையராசாவின் இசையிலே, இதன் கீற்றுகளை, பலமொழிகளில் இங்கு உணரலாம்.
  1. முகவீணை, நாகசுரம் போன்றிருக்கும்.ஒன்றரை (18 செ.மீ)அடி உயரமுடையது. சுதி அதிகமென்பதால் வாசிப்பது சிரமமென்பர். இதைப்போன்றதே, திமிரி நாயனம் என்பர். இந்த இரண்டுக்கும், இடைப்பட்ட உயரம் உடையதே, ஷெனாய் என்பர்.ஆனால், தமிழ் இசை சங்கம் படமோ, இரண்டும் ஒன்றே எனக்கூறுகிறது.யாமறியேன் பராபரமே! இனிமேல் தான், இதுகுறித்து கேட்டறிய வேண்டும். திமிரி நாயனத்தின் நீளத்தை கொஞ்சம் கூட்டி, சுதியைக் குறைத்து திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை உருவாக்கிய இசைக்கருவியே, பாரி நாயனம் என்பர்.
  2. முகச்சங்கு/முகச்சங்கம்/நுகர்சங்கு/முகர்சிங்/மோர்சிங்/யூத யாழ்/முகசங்க்(வடமொழி) என்பது அளவில் 7-8 செ.மீ அளவுடையது. -- உழவன் +உரை.. 01:27, 23 சூலை 2012 (UTC)Reply[பதில் அளி]
  • தமிழ் இசைச்சங்கம் "ஷெனாய்" என்பதை முக வீணை என்கிறது..தினமலரில் வந்தசெய்தி (மே 5, 2012), "முகவீணை. நாகசுர வகையைச் சேர்ந்தது. ஒன்றரை அடி உயரம் மட்டுமே உள்ளது. அதிக சுதி கொண்டது. இதற்கடுத்த நிலையில் இருந்ததுதான் திமிரி நாயனம். இந்த இரண்டுக்கும் இடையிலான உயரம் உள்ளது ஷெனாய் வாத்தியம். திமிரி நாயனத்தின் நீளத்தை கொஞ்சம் கூட்டி சுதியைக் குறைத்து திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை உருவாக்கியதுதான் பாரி நாயனம். இதுவே, இன்று புழக்கத்தில் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்." ஆனால் மேலே பார்வதி கூறியது போல போர்சிங்க் என்னும் கருவியை முகவீணை என்றும் கூறக் கேட்டிருக்கின்றேன். சென்னைத் தமிழ்ப் பேரகராதி, முகவாத்தியம் என்னும் தலைப்பில் உள்ள பதிவில் " 1. Playing on the mouth by striking it with the hand; கையால் வாயை யடித்து இசை யொலி யெழுப்புகை. 2. See முகவீணை." என்று கூறுகின்றது. தமிழ் இசைச்சங்கம் காட்டும் படத்தை அடிச்சான்றாகக் கொண்டு மேற்செல்லுவது நல்லது. வேறு சான்றுகோள்களையும் தேடிப்பார்க்கின்றேன். --செல்வா (பேச்சு) 03:44, 23 சூலை 2012 (UTC)Reply[பதில் அளி]

அச்சான்றுகள்[தொகு]

  1. துளைக்கருவியே எனலாம்.//A kind of flute or pipe; ஒரு வகை வாத்தியம். தித்திசிறு முகவீணை (குற்றா. தல. தருமசாமி. 54).//மேலும்-- உழவன் +உரை.. 06:37, 26 சூலை 2012 (UTC)Reply[பதில் அளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முகவீணை&oldid=1173487" இருந்து மீள்விக்கப்பட்டது