பேச்சு:மனித மரபணுத்தொகைத் திட்டம்
Appearance
இதன் தலைப்பாஇ மனித/மாந்த மரபுத்தொகுதித் திட்டம் அல்லது முழுமரபுத் திட்டம் என மாற்றப் பரிந்துரைக்கின்றேன். அகராதி என்பது சரியான சொல்லாகத் தெரியவில்லை. Genome என்பதை முழுமரபியம், மரபுத் தொகையம் எனலாம். proteome என்பதை முழுப்புரதியம் (முழுமரபியம் வெளிப்படுத்தும் புரதங்கள்) என்றும் கூறலாம்--செல்வா 04:09, 9 மார்ச் 2010 (UTC)
- பேச்சு:genome உரையாடலையும் பாருங்கள். மரபணுத்தொகுதி, அல்லது மரபணுத்தொகை என்பது பொருத்தமாக இருக்குமெனத் தோன்றுகின்றது. System என்பதுடன் குழப்பிக் கொள்ளாமல், மரபணுத்தொகை என்றே குறிப்பிடலாம் என்பது எனது கருத்து. அனைவரும் ஏற்றுக் கொண்டால், இது தொடர்பான கட்டுரைகளில் தகுந்த மாற்றங்களை செய்யலாம்.--கலை 10:02, 1 சூன் 2011 (UTC)
- கலை, தகுந்த மாற்றங்களைச் செய்யுங்கள். பிந்திய பதிலுக்கு மன்னிக்க. --Natkeeran 23:43, 1 சூன் 2011 (UTC)