உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:பெயரெச்சம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதலில், விளக்கத்தில் “பெயரெச்சம் என்பது பெயர்ச்சொல்லை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல்” என கூறப்பட்டுள்ளது. அதாவது, வினைச்சொல்லே எஞ்சிநிற்கும் அது பெயர்ச்சொல்லையேற்று முடிவுபெறும் எனப்பொருட்படுகிறது.

ஆனால், குறிப்புப்பெயரெச்சத்தின்கீழ் கொடுக்கப்பட்டுள்ள எ.கா. ’நல்ல’, ’அழகிய’போன்றவை வினைச்சொல் அல்லவே, அவை பெயர்ச்சொற்களே.

ஆக, பெயரெச்சம் என்பது எச்சபெயர்ச்சொல்லை முடிவுசெய்வதாகவும் இருக்கலாம் அல்லவா? மேலும்விளக்கந்தேவை என்பதுபோல் தெரிகிறது.

மேலும், விளக்கத்தில் ‘முடிவுற்றப்பின் அது பெயரெச்சத்தொடர் எனப்படுகிறது’ என்பதையும் சேர்க்கலாமே. ஏன்னென்றால் ‘தொகாநிலைத்தொடரில்’ நாம் ‘பெயரெச்சத்தொடரைப்பற்றி’ குறிப்பிட்டுள்ளோம்.--−முன்நிற்கும் கருத்து Asivakumar6 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பெயரெச்சம்&oldid=1171738" இலிருந்து மீள்விக்கப்பட்டது