பேச்சு:பல்லாங்குழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பல்லாங்குழி என்பது மரம் அல்லது உலோகத்தால் ஆன ஒரு சாதனம். அதில் இரு வரிசைகளில் ஏழு குழிகள் இருக்கும். பொதுவாக புளியங்கொட்டையை வைத்து பல்லாங்குழி ஆட்டம் (பாண்டி ஆட்டம்) ஆடப்படுகிறது. எனக்கு தெரிந்து 4 வகை பாண்டி ஆட்டங்கள் இருக்கின்றன.

1. இருவர் மட்டுமே விளையாடும் சாதா பாண்டி

விளையாட்டில் ஈடுபடும் இருவரும் எதிர் எதிராக அமர்ந்து கொள்ள வேண்டும் (இருவருக்கும் தலா 7 குழிகள்). ஒவ்வொரு குழியிலும் 5 காய்கள் (புளிங்கொட்டை அல்லது வேப்பங்கொட்டை) வீதம் மொத்தம் 70 காய்கள் 14 குழிகளிலும் நிரப்பப்பட வேண்டும். முதலில் ஒருவர் விளையாட வேண்டும் அதாவது ஒரு குழியில் இருக்கும் 5 காய்களை பிரித்து வலமாக ஒவ்வொரு குழியிலும் ஒவ்வொன்றாக போட்டுக்கொண்டே செல்ல வேண்டும். 5 குழி முடிந்ததும் 6 குழியில் இருக்கும் காய்களை முன்பு போலவே பிரித்துப் போட வேண்டும். இதே போல பொட்டுக்கொண்டே சென்றால் சில குழிகள் காய்கள் இல்லாமல் காலியாகி விடும். பிரித்து போட்டுக் கொண்டிருக்கும் காய்கள் ஒரு காலியாக இருக்கும் குழிக்கு முன் முடிந்து விட்டால் காலியாக இருக்கும் குழிக்கு அடுத்த குழியிலும் அதற்கு எதிரில் இருக்கும் காய்களை எடுத்துக் கொள்ளலாம். இரணடு காலி குழிகளிற்கு முன் கையிலிருக்கும் காய்கள் முடிந்து போனால் ஆடுபவர் ஒன்றுமில்லாமல் "சும்மா" போக வேண்டும்.அதோடு ஒருவரின் ஆட்டம் முடிந்து விடும். அடுத்தவர் அதைப்போலவே ஆட வேண்டும். ஒருவரின் பங்கிலிருக்கும் 7 குழிகளில் ஏதாவது ஒரு குழியில் 4 காய் வருவது "கண்" என்று அழைக்கப்படும், அதை அந்த பக்கத்திலிருப்பவர் எடுத்துக்கொள்ளலாம். ஆட்டத்தின் முடிவில் நன்றாக விளையாடத் தெரியாதவரிடம் 35 க்கு (< 50%) குறைவான காய்களே இருக்கும். காய்கள் நிரப்பாமல் மீதி இருக்கும் குழிகளில் "பீத்தை" (ஏதாவது குப்பை அல்லது காகிதம்) போட வேண்டும்.பீத்தை குழிகளில் அடுத்தவர் காய் போட்டால் பீத்தை போட்டவர் அந்த காயை "ஊதி" எடுத்துக்கொள்ளலாம் (as bonus). இப்படி விளையாண்டு கொண்டே போனால் ஒருவரிடம் (விளையாடத் தெரியாதவரிடம்) 5 க்கும் (ஒரு குழிக்கும் பற்றாகுறை)குறைவான காய்கள் இருக்கும் நிலை வரலாம். அப்படி வரும் போது "கஞ்சி காய்ச்சுதல்" வேண்டும். "கஞ்சி காய்ச்சுதல்" என்றால் ஒவ்வொரு குழியிலும் ஒவ்வொரு காய் போட்டு முன்பு போலவே விளையாட வேண்டும். சில சமயங்களில் ஒருவர் எல்லா காய்களையும் இழப்பதும் உண்டு. அப்போது வெற்றி பெற்றவர் தோற்றவரைப் பார்த்து "தோத்தாந்துள்ளி....." பாடலாம்

இது போல 3 பேர் விளையாடும் மிகவும் விரு விருப்பான "ராஜா பாண்டி", ஒருவர் மட்டுமே முடிவே இல்லாமல் விளையாடும் "சீதா பாண்டி" (சீதை அசோக வனத்தில் இருக்கும்போது விளையாடியதாம்), நிறைய காய்கள் வைத்து விளையாடும் "காசி பாண்டி" (இது என்க்கு சுத்தமாக மறந்து போய்விட்டது). இது நான்கும் நான் அறிந்தவை. யாருக்காவது தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நாளை அல்லது வேரொரு நாள் சொல்கிறேன்....அல்லது வேறு யாராவது இவற்றை இங்கே பதிவு செய்தாலும் மிக நன்று.

இதையன்றி உங்கள் ஊர்ப் பகுதிகளில் விளையாடப்படும் வேறு வகையான பாண்டி ஆட்டம் ஏதாவது இருந்தாலும் இங்கே பதிவு செய்யுங்கள்.

இது மிகப் பழைமையான விளையாட்டு....ஒரு காலத்தில் தங்க பல்லாங்குழியும் முத்துக்களும் வைத்து பாண்டி ஆட்டம் ஆடியதாக எங்கோ படித்திருக்கிறேன்.....

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பல்லாங்குழி&oldid=131913" இருந்து மீள்விக்கப்பட்டது