பேச்சு:பனையோலை
Appearance
இந்த பனையோலைக்கிளியைப்பார்த்து, ஏறத்தாழ 30ஆண்டுகள் உருண்டோடி விட்டது. பள்ளிச்சிறுவனாக இருந்தபோது, உடன்படித்த நண்பனின் அப்பா செய்து கொடுப்பார். ஞாயிற்றுக்கிழமை வந்தால் போதும், அவர் வீட்டுக்கு படையெடுப்போம். அவர் எங்களுக்காக பனையேறி, பக்குவமாய் பறித்து செய்து கொடுப்பார். எங்களது கூக்குரல், மகிழ்ச்சி தான் அந்த ஏழைக்கு நாங்கள் தந்த கைம்மாறோ! தங்கள் படம், என் நினைவலைகளைத் தூண்டியது. மிக்கநன்றி. வணக்கம்--த♥ உழவன் +உரை.. 11:21, 27 சனவரி 2013 (UTC)