பேச்சு:பண்பியல் வெளிப்பாட்டியம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதிலும் இது போன்ற தலைப்புகளிலும் "வாதம்" என்பது தேவை இல்லாதது மட்டுமல்ல, பொருந்தாததும் என்று நினைக்கிறேன். பண்பியல் வெளிப்பாட்டியம் என்று கூறலாம். இயம் என்பது ஒரு இயல்பு, போக்கு, அமைப்பு, ஒழுக்கம் என்பதை குறிக்கும். இயம் என்பது -இசம் என்பதோடு நெருங்கிய உறவும் உடையது (ய --> ச தமிழ் இயல்பும் கூட. பாய் --> பாசனம். இயை --> இசை, குயவன் --> குசவன்; உயர்வு, உயர்த்தி -->உசத்தி; வயம் --> வசம்). எனவே இயம் என்னும் பின்னொட்டை இடப் பரிந்துரைக்கிறேன். --செல்வா 16:08, 10 ஜூன் 2008 (UTC)

தலைப்பிலும், உள்ளடக்கத்திலும் உரிய மாற்றங்கள் செய்துள்ளேன். மயூரநாதன் 16:29, 10 ஜூன் 2008 (UTC)
நன்றி, மயூரநாதன்.--செல்வா 12:35, 11 ஜூன் 2008 (UTC)