பேச்சு:படைப்பாக்கப் பொதுமங்களின் உரிமங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Creativity என்றால் தமிழ் என்ன? ஆக்க திறன் ??

--Natkeeran 17:47, 6 மார்ச் 2007 (UTC)

புத்தாக்கத் திறன் எனலாம். புதுமை அறியும், புதுமை நுண்மாண் நுழைபுலம் அறிந்தாக்கல். --செல்வா 19:19, 6 மார்ச் 2007 (UTC)

"ஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும்." என்பது சரியான மொழி பெயர்ப்பல்ல[தொகு]

http://creativecommons.org/about/licenses/ பக்கத்தில் பார்க்கவும் :

"Attribution : You let others copy, distribute, display, and perform your copyrighted work — and derivative works based upon it — but only if they give credit the way you request."

ஆக்குனருக்கு அல்லது உரிமம் வழங்குனருக்கு அளிக்கப்படும் விளக்கம் அது. மேலும் ஓர் ஆவணப் பயனர், ஆறு வகை உரிமங்களில் எந்தவொன்றினதும் ஒப்பந்தத்திலும் காணுவது (காட்டாக http://creativecommons.org/licenses/by/3.0/ பக்கத்தில்):

"Attribution — You must attribute the work in the manner specified by the author or licensor (but not in any way that suggests that they endorse you or your use of the work)."

எனவே கட்டாயமானச் செய்கை என்னவெனில் ஆவணத்தின் ஆக்குனர் அல்லது உரிமம் வழங்குனர் விதித்துள்ள படி அந்த attribution பணி செயல்படுத்தப்படுவது. ஆக்குனர் அல்லது உரிமம் வழங்குனர் தம் பெயருக்கு மாறாக ஒரு நிறுவனம் அல்லது புறதிட்டு (project) பெயர் அல்லது ஆக்கம் உள்ள வலைத்தள முகவரிக்கு மட்டும் என பல மாற்று விதங்களில் ஒன்றுடன் attribution கோர முடியும் என்பதால் கட்டுரையில் "ஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது திருத்தப்பட வேண்டும்.

--கா. சேது 10:57 8 ஆகஸ்ட் 2009 (IST)

படைப்பாக்க வெளி உரிமங்கள், படைப்பாக்க பொது உரிமங்கள், படைப்பாக்க கள உரிமங்கள்[தொகு]

தமிழில் தருவதே அதன் கருத்தை இலகுவாக புரிய உதவும். --Natkeeran 12:31, 8 ஆகஸ்ட் 2009 (UTC)

attribution - தமிழ்[தொகு]

attribution - தமிழ் என்ன என்று சரியாகத் தெரியவில்லை. ஆனாக் இந்த முக்கிய கட்டுரை கன காலம் கவனிக்கப்படவில்லை. எனவே எனக்குத் தெரிந்த அளவு மாற்றி எழுதப்படப் போகிறது. --Natkeeran 14:11, 2 ஏப்ரல் 2011 (UTC)