உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:நினைவாற்றல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நினைவாற்றல் என்பது ஒருவருக்குள்ள நினைவில் நிலைநிறுத்தி வைக்கும் திறன் ஆகும். ஆனால் நினைவார்த்தல் என்பது ஞாபகத்தில் இலகுவில் மீட்டுக் கொள்ளும் தன்மை பற்றியதாகும். அதாவது ஒரு பாடத்தை சிறப்பாகக் கற்பிப்பதன் மூலம் குறித்த பாடத்தின் நினைவார்த்தலை அதிகரிக்கலாம். ஆனால் நினைவாற்றல் என்பது பாடம் சார்ந்தோ, கற்பிக்கும் முறை சார்ந்தோ மாறக்கூடியதல்ல. அது மூளையத்தின் மாறாத ஆற்றல். உணவு முறை மூலமும் வைத்திய முறை மூலமும் நினைவாற்றல் அதிகரிப்பது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறௌம். நினைவார்த்தல் என்பது கற்றல் பொருள் பற்றியது. ஒப்பீட்டு ரீதியில் சிலவற்றை நினைவார்த்தல் செய்கிறௌம். நினைவார்த்தலை அதிகரிக்க சில உத்திகளைப் பாடசாலைக் காலத்தில் பயன்படுத்தியிருக்கிறௌம்.

எ.கா: பாசிச்சாயத்தாள் நீலத்திலிருந்து சிவப்பாக மாறினால் அது அமிலம். என்பதை BLUE - RED - ACID = BRA என ஞாபகம் வைக்கிறௌம்.

உலோகங்களின் சுவாலைப் பரிசோதனை நிறங்கள், மற்றும் மண்டையோட்டு நரம்புகளின் பெயர்கள் ,என்பவற்றை நினைவார்த்தல் செய்வதற்கெல்லாம் பல உத்திகளை உபயோகித்தோமல்லவா? இதை ஒரு தனிக்கட்டுரையாகக் கூட எழுதலாம் போல் உள்ளது.--சஞ்சீவி சிவகுமார் 10:58, 11 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நினைவாற்றல்&oldid=815922" இலிருந்து மீள்விக்கப்பட்டது