பேச்சு:நற்றமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நற்றமிழ் என்று தலைப்பு இருக்கலாம். அல்லது நல்ல தமிழ் என்றாவது எழுத வேண்டும். ஆனால், நல்ல தமிழ் என்று எழுதுவது கொச்சை வழக்கு போல் தோன்றுகிறது. இல்லை, ஒரு வேளை இது கூட நல்ல தமிழுக்கான இலக்கணமாக இருக்கலாம். நற்றமிழ் என்ற சொல் புரியாத சிலருக்கு நல்ல தமிழ் என்பது புரிந்தால் அது நல்ல தமிழ் தானே :) நல்லதொரு கட்டுரைத் தொடரை தொடங்கி இருக்கிறீர்கள். நன்றி, நற்கீரன்--Ravidreams 18:00, 23 பெப்ரவரி 2007 (UTC)

இதுக்கு என்ன பதிலை நான் தர முடியும். செந்தமிழ், கொடுந்தமிழ், தனித்தமிழ் என்று எல்லாம் சேர்ந்தே வந்திருப்பதால் நல்லதமிழ் என்று எழுதினேன். அது நற்றமிழ் என்றா அமைய வேண்டும். விளக்க முடியுமா. நன்றி. --Natkeeran 18:48, 23 பெப்ரவரி 2007 (UTC)

நற்கீரன் நான் சொல்ல வந்தது - நல்லதமிழ் என்று சேர்த்து எழுதுவது பிழை என்று தோன்றுகிறது. குறைந்த பட்சம் பிரித்து எழுத வேண்டும். இல்லை, சேர்ப்பது என்றால் நற்றமிழ் என்று வர வேண்டும். தவிர, நீங்கள் கொடுத்துள்ள வரையறை உங்கள் தனி நோக்கில் தரப்பட்டுள்ளது. இது வரைக்கும் நல்ல தமிழ் என்ற ஒரு வடிவமும் அதற்கான இலக்கணங்களும் பொதுவில் உரையாடப்பட்டதாக அறியேன். தவிர, இதை நல்ல தமிழ் என்றால் மிச்சதெல்லாம் கெட்ட தமிழ் என்று கருதப்படும் வாய்ப்பும் உண்டு :) கட்டுரையின் பெயர், வரையறை இரண்டும் மறு ஆய்வுக்குட்படுத்த வேண்டும். பொதுத் தமிழ் என்று பெயர் வைப்பது பொருத்தமாக இருக்கும். ஆனால், வழக்கில் ஆயப்படாத வடிவங்களை நாம் விக்கியில் பெயர் கொடுத்து எழுதுவது சர்ச்சைக்குள்ளாகக் கூடும். விக்கிபீடியாவில் முதல் நிலை ஆய்வுக் கருத்துக்களை தெரிவித்துக் கட்டுரைகளை எழுதக்கூடாது என்பது கவனிக்கத்தக்கது.--Ravidreams 19:42, 23 பெப்ரவரி 2007 (UTC)

ரவி, இதை ஒரு தற்கால கருத்துரு என்றுதான் விளங்கிக்கொள்ள முடியும். ஆமாம், இது என் தனிப்பட்ட புரிதல் என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் இந்த கருத்துரு பல களங்களில் உண்டு. த.வி. அலசல்களில் பயன்படும் போல தோன்றியதால் இங்கு வரையறை செய்ய முயன்றேன். மற்ற பார்வைகளையும் தர அல்லது வரையறையையே மாற்ற பிறருக்கு உரிமை உண்டு. த.வி. இது பொருத்தமற்றது என்று பிறர் கருதினால், தகவலை எனது பேச்சில் போட்டுவிட்டு நீக்கி விடுவும் தாயாரகவுள்ளேன். --Natkeeran 19:58, 23 பெப்ரவரி 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நற்றமிழ்&oldid=108918" இருந்து மீள்விக்கப்பட்டது