பேச்சு:திருமங்கலம் சூத்திரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


இக்கட்டுரையின் தலைப்பைக் கூட திருமங்கலம் வழிமுறை எனும் பெயருக்கு மாற்றம் செய்யலாம் என்பது என் கருத்து.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:36, 5 சூலை 2011 (UTC)[பதிலளி]
இல்லை சுப்ரமணி. வேண்டுமென்றால், நீங்கள் பரிந்துரைக்கும் பெயரை அடைப்புக் குறியிலும் வழிமாற்றாகவும் எடுத்துக் கொள்ளலாம். இதனை ஆங்கிலச் சொல்லாகப் பாராமல், ஒரு பொதுப்படையான சொற்றொடராகக் கருதலாம். எ.கா: பூக்கோசு தமிழில் இருந்தும் காலிஃபிளவர் என்பதே தமிழ் என்பது போல வைத்துக் கொள்ளலாம். :) நான் வழிமாற்றையும் அடைப்புக்குறி குறிப்பையும் கொடுத்துவிடுகிறேன். சுட்டியமைக்கு நன்றி. :) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 16:47, 5 சூலை 2011 (UTC)[பதிலளி]
சுப்பிரமணியின் கருத்து சரியே. இது போன்ற சொற்றொடர்கள் பிற ஊடகங்களால் ஆங்கிலக் கலப்புடன் உருவாக்கப்படுகின்றன / பரப்பப்படுகின்றன. நாமும், அப்படியே ஆங்கிலம் கலந்து இட வேண்டும் என்றில்லை. தலைப்பைத் தமிழாக்க வேண்டும்--இரவி 18:00, 5 சூலை 2011 (UTC)[பதிலளி]
தலைப்பில் உள்ள பார்முலாவை மாற்றலாம். திருமங்கலம் பார்முலா என்பதனை வழிமாற்றாக கொள்ளலாம். நான் திருமங்கலம் வாய்பாடு என்று பயன்படுத்தினேன். :) --குறும்பன் 18:35, 5 சூலை 2011 (UTC)[பதிலளி]

────────────────────────────────────────────────────────────────────────────────────────────────────சரி. தலைப்பை திருமங்கலம் சூத்திரம் என்று மாற்றிவிடுகிறேன். மீதி அனைத்தையும் வழிமாற்றாக ஆக்கிவிடுகிறேன். கருத்துகளுக்கு நன்றி. :) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 18:45, 5 சூலை 2011 (UTC)[பதிலளி]