பேச்சு:திடீர் நினைவகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலைச் சொற்கள்[தொகு]

நல்ல கலைச்சொற்களை ஆண்டுள்ளீர்கள். நாண்டு (NAND), நார் (NOR) என்பனவற்றை முறையே இல்லும்மை, இல்லல்லது. ஆனால் சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன என நினைக்கிறேன். Flash Memory ஐ திடீர் நினைவகம் என்பதைவிட உடன்கொள் நினைவகம் எனலாம். AND என்பதை உம்மைக் கதவு அல்லது கதவம் என்றால், NAND என்பதை இல்லும்மை என்பது சரிதான். எதிரும்மை அல்லது மறுவும்மை (உம்மை மறுப்புக் கதவம்) என்றும் கூறலாம். ஆனால் NOT என்னும் முன்னொட்டு உள்ள எல்லாவற்றுக்கும் "இல்" என்னும் சொல்லே சீராக வரவேண்டும் என்று நீங்கள் விரும்பியிருக்கலாம். ஆனால் NOR என்பதற்கு இல்லல்லது என்பது முற்றிலும் சரியானதாக இல்லை. அப்படி எழுத வேண்டும் என்றால் இல்-அல்லது என்று எழுதவேண்டும். OR என்பதை A ஓ, B ஓ 1 ஆக இருந்தால் C யின் மதிப்பு 1 ஆக இருக்கும் என்னும் பொருளில். ஓக் கதவம் என்றும் கூறலாம். ஆங்கில OR என்பதின் முதலெழுத்தை நுட்பமாய்ச் சுட்டுவதாகவும் கொள்ளலாம். உம்மைக் கதவம், ஓக் கதவம், இல்லை அல்லது அல்லை அல்லது மறுப்புக் கதவம் அல்லது எதிர்க் கதவம் (உள்ளீட்டுக்கு நேர் எதிரான வெளியீடு). Exclsuive OR எனதற்கு ஓ-மட்டும் கதவம் எனலாம். நீங்கள் வெளியிணைப்பாக இட்டிருந்த வலைப்பதிவையும் கண்டேன். மிக நல்ல முயற்சி. நீங்கள் பதிவு செய்து இங்கு கட்டுரைகள் எழுதலாமே. --செல்வா 22:06, 15 மே 2009 (UTC) Flash என்னும் சொல் ஒரேநேரத்தில் பல நினைவறைகளில் தரவு பதிவு செய்வதையோ, அழிக்க இயலுவடஹியோ குறிக்கும். ஒன்றன் பின் ஒன்றாக அல்லாமல் ஒரே நேரத்தில் நிகழ்வதால் உடன்கொள் (ஒருசேர பதித்துக் கொள்ளவோ, ஒருசேர அழித்துக் கொள்ளவோ இயலுமாறு அமைந்த நினைவகம்.--செல்வா 22:15, 15 மே 2009 (UTC)[பதிலளி]


அன்புள்ள செல்வா ஐயா அவர்கள்,

எந்த கலைச்சொல்லாக இருந்தாலும் அதிக புழக்கத்தில் இருந்தால், ஒரே தரமாக தமிழ் தரவுத்தாள் இணையதளத்தில் மாற்றி அமைத்திடுவேன். தமிழுக்கு இன்னும் சீன CAAC (China Association of Adacemic Sciences) கலைச்சொல் தரப்பாடு குழு இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. தமிழ்நாடு அரசு ஒன்றுக்கு மேலான முரண்பாடு கலைச்சொற்களிரிருந்து ஏதேனும் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. தமிழ் Wikipediaவிலிருந்தும் எது அதிக புழக்கத்தில் உள்ளதோ, அதயே பயன்படுத்துவேன். தமிழ் Wikipedia தமிழ் கலைச்சொற்களை செந்தரப்படுத்தும் தளமாக அமைந்தாலும் மிகவும் நன்று. சீன CAACயைப் போல் தமிழில் தனிமங்கள் பெயர்களும் உச்சரிப்பு, படிப்பு எளிமை, பழந்தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றை எல்லாம் கருதி தரப்படுத்தப்பட வேண்டி உள்ளது.


மறுப்புக் கதவம் என்கிறச் சொல்லிற்கு தமிழக அரசாங்க ஆவணங்களில் 'இல்லை வாயில்' என குறிப்பிடப்பட்டுள்ளது. 'வாயில்' என்கிறச் சொல்லிருந்துதான் ஒருங்கிணைப்பியல் (VLSI) துறைக்கான வாயிலிடல் (gating) - (உதா. கடிகை வாயிலிடல் - clock gating) என்கிறச் சொல்லையும் பெற்றேன். கதவம் சொல்லும் நன்றாக உள்ளது.

-இங்ஙனம், ராஜ், தொழில்நுட்பம் இணையம்

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஆனால் சொற்களைத் தனியாக, பயன்பாட்டுச் சூழல் இல்லாமல், செந்தரப்படுத்துவது நல்லதல்ல. அதாவது ஒரு சொல்லின் 2-3 முக்கியப்பயன்பாடுகள் சொற்றொடருடன் ஒரு கருத்துச் சூழலில் இருந்தால்தான் அச்சொற்களில் வலு இருக்கும். அதுவும், துறையறிவும் தமிழறிவும் கொண்ட பலருடன் கருத்தாடி அமைவது நல்லது. கடிகை வாயிலிடல் என்றால் ஒரு கடிகாரத்தை வாயில் போட்டுக்கொள்ளுதல் என்னும் பொருள் வரும்படி உள்ளது நன்றாக இல்லை என்பது என் கருத்து. வாயில் என்பது entrance ஆகுமே அன்றி கதவம் ஆகாது. வாயில் என்னும் சொல் பொருந்தாதது (என் தனிக்கருத்து). கடிகைக் கதவம் எனலாம். கலைச்சொற்கள் சரிவர ஆக்கி தரப்படுத்தப்படாமல் இருப்பது வருத்தம் அளித்தாலும், ஆவன செய்ய முயலுவோம். உங்களைப் போல நல்லார்வம் கொண்ட ஒரு 5-10 பேர் இருந்தாலும் கூட, விக்கிப்பீடியா போன்ற பொது மன்றத்திலோ, அல்லது இதற்காக உருவாக்கப்பட்ட கூகுள் குழுமத்திலோ உரையாடி தேர்வு செய்யலாம். என்னை செல்வா என்றே அழையுங்கள் ராஜ் (உங்களை இராசு என்றோ அல்லது ராச்' என்றோ ராசா என்றோ குறிப்பிடலாமா?)--செல்வா 10:40, 16 மே 2009 (UTC)[பதிலளி]

OR கதவத்தை ஓனாக் கதவம் என்றும் கூறலாம். அதாவது அல்லது என்பது or என்னும் பொருள் கொண்டிருந்தாலும், "if not" என்பதே கருத்து. A அல்லது B என்றால், A "if not" B. ஆனால் ஓ என்னும் பின்னொட்டு, இச்சூழல்களில் or என்னும் கருத்துக்கு ஒத்தது. ஆகவே ஓனாக் கதவம் அல்லது ஓகாரக் கதவம் என்று கூறலாம். ஒரு கருத்துக்காகக் கூறுகிறேன். எது எடுபடுமோ அறியேன். --செல்வா 10:48, 16 மே 2009 (UTC)[பதிலளி]

செல்வா வணக்கம்! ராஜ் என்றே அழைக்கலாம்! வாயில் என்கிற சொல் இரண்டு தமிழ் வழி பாடநூல்களில் குறிப்பிடப்பட்டது. 'வாயில்', 'உம்மை வாயில்', 'விலக்கல்லது வாயில்' (XOR Gate), 'இல்லையெனில்' (if not) என்கிற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதனால் அவ்வாறே எடுத்தேன். பெரும்பாகுமான சொற்கள் தமிழ் வழி பாடநூல்களிரிந்தே அப்படே மாற்றாமல் எடுத்துள்ளேன். சில சொற்கள் சரியான கலைச்சொற்களாக இல்லையென்றாலும், தமிழக அரசு இவைகளை நூல்களில் அதிகமா பழக்கமாக்கி விட்டது. "தமிழ் கம்ப்யூட்டர்" அச்சுவடிவ மாதவிருமுறையிதழிலும் (Regd no TN/CH(C)/309/09-11) இவை தோன்றுகின்றன. திடீர் என மாற்றினாலும் குழப்பம் ஏற்படுகிறது. உங்கள் பரிந்துரைகளை இயன்றளவு பயன்படுத்துவேன். www.tamildata.co.ccவில் முக்கியமானத் தரவுத்தாள்களை தமிழுக்கு மொழிபெயர்க்க அடுத்த இரண்டு ஆண்டுகள் வரை எடுக்கலாம். S29GL032/64N Spansion NOR Flash இதுவரை பாதி முடிந்துள்ளது. Clock Buffer, DDR (அனேகமாக DDR3) Memory, Oscillators, Op-Amps வரும் நாட்களில்/மாதங்களில் மொழிபெயர்ப்பு செய்வேன்.

இங்ஙனம், ராஜ்

நீங்கள் எனக்கு ஒரு மின் மடல் அனுப்ப இயலுமா? செந்தரம் சீர்தரம்செய்வது பற்றியும், வேறு பலவும் உரையாட உதவியாக இருக்கும். என் மின் முகவரி c.r.selvakumar at gmail.com
நன்றி. --செல்வா 13:33, 16 மே 2009 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திடீர்_நினைவகம்&oldid=379870" இலிருந்து மீள்விக்கப்பட்டது