பேச்சு:தமிழில் கனடிய அரச சேவை அமைப்புகளின் தகவல்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தக் கட்டுரையை நீக்கிவிடவும். பாலாஜி 07:34, 22 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

இந்தக் கட்டுரையின் நடுநிலைமை, பயன் ஆகியவை கேள்விக்குரியவை. பாலாஜி 07:37, 22 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

நடுநிலைமை இங்கு கேள்விக்குரியதாக ஏன் வருமென்று தெரிய வில்லை. அனைத்து இணைப்புகளும் அரச திணைக்களங்கின் தகவல் குறிப்புகள். இட்டதன் நோக்கம் அதன் தகவல் பெறுமதியே. நிச்சியமாக ஒரே இடத்தில் தருவதால் பயன் உண்டு. ஆனால் அவ்விடம் த.வி. எனபது கேள்விக்குரியதே.

கட்டுரையின் நடுநிலைமையில் பிரச்சினையில்லை. ஆனால், கலைக்களஞ்சியத்தில் இது போன்ற குறிப்புகளை தர வேண்டுமா என்பது கேள்விக்குரியது. இணையத்தில் தமிழில் தகவல் தளங்கள் இல்லாததால் வழக்கமான கலைக்களஞ்சியக் கட்டுரைகளைத் தாண்டி பல விதயங்களையும் விக்கிபீடியாவில் குவிக்கும் போக்கு இருக்கிறது. இது குறித்து உரையாடப்பட வேண்டும்.--Ravidreams 09:35, 22 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

ரவி கூறியபடி இப்படிப்பட்ட தகவல்கள் த.வி. குவியப்படுத்துவது நன்றா என்பது அலசப்படவேண்டும், அதுவரை விட்டுவைக்கவும். --Natkeeran 15:23, 22 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

  • அத்தோடு, த.வி. எங்களுக்கு தேவையான local விடயங்களையும் தரவேண்டும். எல்லாவற்றுக்கும் உலகை ஒரு அளவுகோலாக பயன்படுத்த முடியாது.
  • சில சமயம் கட்டுரையில் இடப்பட்டிருக்கும் பொருளுக்கும் இணையத்துக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு வரும்பொழுது, அது உலகில் இல்லையே போன்ற ஒரு தோற்றப்பாடு ஏற்படுகின்றது. இக்கட்டுரை இணையத்தில் தமிழில் உள்ள தகவல்கள் பற்றிய ஒரு கட்டுரை. ஒவ்வொரு திரைப்படத்துக்கும் ஒரு பக்கம் ஒதுக்கி தகவல் சேர்க்கும் நாம், இப்படி பட்ட பயனுள்ள தகவல்களை குவியப்படுத்த ஏன் தயங்கவேண்டும் என்று நீக்க பருந்துரைத்தவர் விளக்க வேண்டும். நீக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு, துல்லியமான காரணங்களை ஆதாரபூர்வமாக முன்வைத்தால் நன்று. --Natkeeran 16:08, 22 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

ரவி, ஒரு சில கட்டுரைகளில் த.வி. சாதாரண நடை, வழக்கங்களில் இருந்து விலகி இட்டிருக்கின்றேன். இந்த உரையாடல் எங்கு செல்கின்றது என்று பார்ப்போம். --Natkeeran 16:12, 22 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

நக்கீரன் அவர்கள் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். "கனடிய அரசின் அமைப்புகள் பல மக்களுக்கு அவசியமான தகவல்களை அவர்களுக்கு இலகுவில் புரியும் மொழியில் தந்து அந்த தகவல்கள் மக்களை சென்றடைவதை தமது கடமையாக கருதுகின்றன" -- இந்த வாக்கியம் கனடிய ஆளும் கட்சியினரின் (அல்லது அரசு அதிகாரிகளின்) பிரச்சாரம் போலல்லவா இருக்கிறது! மேலும் இந்த ஆவணங்கள் அவசியம் என்று தாங்கள் கருதினால் CAMH, OPHA, Ontario Energy ஆகியவை பற்றி எழுதிவிட்டு அவ்விணையத்தளங்களுக்கு இணைப்பு தரலாம் என்று நினைக்கிறேன். பாலாஜி 17:27, 22 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

பாலாஜி உங்களின் கருத்துக்கள் நன்றாகவே அமைகின்றன. நன்றி. உரம் சேர்ப்பவை. தொடர்ந்து தாருங்கள். விரும்பியவற்றை சேர்ப்பதற்கு இதுவொன்றும் தனிப்பட்ட தளமோ, வலைப்பதிவோ, அல்லது personal google notebook அல்ல. கேள்வி எழுப்பினால்தானே யாரம் தவறு செய்யும் பொழுது திருத்தி கொள்லாம்.

இங்கு நான் குறிப்பிட்டது civic services தான், பொதுவாக கட்சி சார்பற்ற அமைப்புகள். புரியும் மொழியில் தருவது அவர்களது கடமை மட்டும் அல்ல, மக்களின் உரிமையும் கூட. அந்த வசனத்தை எப்படி மாற்றியமைக்கலாம்.

எழுதலாம், ஆனால் அவை குறுங்கட்டுரைகளாகவே அமையும். இப்போதைக்கு இங்கு குவித்து விட்டு பின்னர் பார்க்கலாம். த.வி பட்டியல்களின் பயன்களில் அதுவும் ஒன்று.--Natkeeran 20:17, 22 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]