பேச்சு:டையாக்சின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டையாக்ஸின் என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் அல்லவா?--Sivakumar \பேச்சு 08:08, 21 ஏப்ரல் 2007 (UTC)

ஆம், நகர்த்தலாம்--ரவி 12:58, 21 ஏப்ரல் 2007 (UTC)
டையாக்சின்? ;) --சிவக்குமார் \பேச்சு 17:54, 8 ஜூன் 2009 (UTC)

அன்னியச் சொற்களுக்கு கிரந்தச் சொற்களை பயன்படுத்துவது உச்சரிப்பு துல்லியத்திற்கு சிறந்தது என. ஸ துல்லியமாக S எழுத்தைக் குறிப்பிடுகிறது. அன்னியச் சொற்கள் குறிப்பாக வேதிப்பொருட்களின் உச்சரிப்பு, அன்னிய பெயர்கள், இடங்கள் ஆகியவற்றிற்கு உச்சரிப்பு ரீதியாக கிரந்த எழுத்துக்களின் பயன்பாடு சிறந்தது. எனவே டையாக்ஸின் எழுத்து வரிசை சிறந்தது.

குணா

குணா, நீங்கள் கூறுவது புரிகின்றது. ஒலிப்புத்துல்லியம் தேவைதான், ஆனாலும் கூடிய அளவு இருந்தால் போதும். மிகுதுல்லியம் பார்க்க இயலாது. மேலும் ஒவ்வொரு மொழியும் சற்று மாற்றியே பயன்படுத்துகின்றன. ஒலிப்புத் துல்லியம் வேண்டும் எனில், இவ்விடத்தில் டையாக்ஃசின் எனலாம். திருக்குறளில்
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.

என்று வரும் குறளில் தமிழ்ச்சொல் கஃசு ( = காற்பலம் எடை) என்பது ஆளப்பட்டுள்ளதைக் காணலாம். அதாவது நான்கு கஃசு = 1 பலம். இச்சொல் கஃசு என்பதை kahsu என்பது போல ஒலிக்க வேண்டும். ஆகவே காற்றொலி சகரம் வரும் இடங்களில் ஃச என்று எழுதலாம். பசி, காசு என்பனவற்றில் வரும் சகரமும் காற்றொலி சகரம்தான். எனவே வல்லினத்து அடுத்து காற்றொலி சகரம் வேண்டின் ஃச என்பதைப் பயன்படுத்தலாம். டையாக்சின் (daiyaawkchin) என்று இருப்பதால் பெரிய குறை ஏதும் இல்லை. இதுவே dioxin என்பது வழக்கத்தில் அறிந்துகொள்ளப்பெறும். தமிழ் டை என்பதும் ஆங்கிலத்தில் di என்பதும்கூடவேறுபாடு உடையதே. எனவே மிகுதுல்லியம் பார்க்க வேண்டியதில்லை (பார்க்கவும் முடியாது). பல மொழிகள் பலவாறும் ஒலிக்கப்பெறும். ஆங்கிலேயரும் கூட இடத்துக்கு இடம் மாறுபாட்டோடு ஒலிப்பர். --செல்வா 21:13, 25 செப்டெம்பர் 2010 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:டையாக்சின்&oldid=599514" இருந்து மீள்விக்கப்பட்டது