பேச்சு:டேவிட் லாயிட் (வரைக்கதை ஓவியர்)
Appearance
Untitled
[தொகு]வத்சன், நீங்கள் மிகவும் ஆர்வத்துடன் பல கட்டுரைகளை எழுதி வருகிறீர்கள். வாழ்த்துக்கள். ஒரு சிறிய ஆலோசனை: சொற்களுக்கு முதல் எழுத்தாக "ஒற்றெழுத்து" வரும்படி எழுதாதீர்கள். (எகா: ப்ரியா, ல்லோயிட்). இத்தகைய சொற்களைப் பின்வருமாறு எழுதலாம்:
- Priya - பிரியா
- Prabu - பிரபு
- Lloyd - லாயிட் அல்லது லோயிட்
- Chlorine - குளோரீன்
- Bromine - புரோமீன்
David Lloyd என்பதை "டேவிட் லாயிட்" (தமிழ்நாட்டு ஒலிப்பு) அல்லது டேவிட் லோயிட் (இலங்கை ஒலிப்பு) என எழுதுவது நல்லது. மயூரநாதன் 15:33, 13 டிசம்பர் 2009 (UTC)
- நன்றி.:) மன்னிக்கவும் அய்யா! எனக்கு ஒற்றெழுத்து என்றால் என்ன என்பது இப்பொழுது தான் தெரிகிறது. நான் பள்ளியில் தமிழ் பயிலாததால் எனக்கு இலக்கணங்கள்,முறையான எழுத்துமுறை இதெல்லாம் தெரியாது. தமிழ் மீது உள்ள காதலினால் எல்லா மொழியிலிருந்தும் தமிழிற்கு மொழிபெயர்க்க வேண்டும் என்ற லட்சியம். நான் கட்டுரை தலைப்பில் தவறு செய்திருந்தால்,நீங்கள் தாரளமாக அதை தகுந்த தலைப்புக்கு நகர்த்தலாம். வருங்காலத்தில் தங்களின் உதவியை எதிர்பார்க்கிறேன் பிழை திருத்தத்தில்.-- Vatsan34 11:15, 19 டிசம்பர் 2009 (UTC)