உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:சேரன் (கவிஞர்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பக்கத்தை தொடங்கிய மு.மயூரன் சேரன். உ என்ற பெயரிட்டதற்கு தன் விளக்கங்களை இங்கு தெரிவித்திருக்கிறார். அவ்வாதம் இன்னும் முற்று பெறாமல் இருக்கிறது. இது விடயத்தில் தமிழ் விக்கிபீடியா பெயரிடல் மரபும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை--ரவி 09:18, 15 ஜூன் 2006 (UTC)

மயூரன் குறித்த க்கருத்தைத் தெரிவித்த போது நானும் உடனிருந்தேன். ஆயினும் ஆங்கில விக்கிப்பீடியா போலவே தொடரலாம் என்றே தோன்றுகின்றது. ஏனைய எல்லாக் கட்டுரைகளும் அவ்வாறே உள்ளன. - கோபி


பெயரே முதலில் இருக்கவேண்டும் என்பது என் கருத்து. ஏனெனில், எல்லோருக்கும் முன் எழுத்துக்கள் தெரிந்திருக்கும் என்று எதிர்பார்க்க இயலாது. மேலும், எத்தனை முன் எழுத்துக்கள், பட்டங்களும் குறிப்பிட வேண்டுமா என பல குழப்பங்கள் ஏற்படும். என்வே. இராமன், சி.வி., சர் என்று எழுத்துவதுதான் நல்லது. நூற்றுக்கணக்கான கலைக்களஞ்சியங்களிலே இவ்வாறுதான் எழுதுகின்றனர். வைரமுத்துக்கு என்ன முன் எழுத்து என்றோ, கண்ணதாசனுக்கு என்ன முன் எழுத்து உண்டோ என தேடும் பொழுது நினைவுகொள்ளத்தேவை இல்லை. கட்டுரைக்குள்ளே இவற்றை விவரமாக எழுதலாம்.--C.R.Selvakumar 16:03, 15 ஜூன் 2006 (UTC)செல்வா
உங்கள் கருத்துடன் உடன்படுகின்றேன். --Natkeeran 16:05, 15 ஜூன் 2006 (UTC)

சரிநிகர் பத்திரிக்கையில் திரு சேரனின் ஆற்றிய பணி பற்றி யாரும் ஏதும் கூறவில்லையே ஏன்?--C.R.Selvakumar 16:06, 15 ஜூன் 2006 (UTC)செல்வா

நற்கீரன், செல்வா நீங்கள் கூறுவது சரிதான். பொதுவாக கலைக்களஞ்சியங்கள் எல்லாவற்றிலும் surname இன் பின்னர்தான் முதலெழுத்துக்கள் அல்லது வேறு பெயர்கள் இடுவார்கள். ஆங்கில விக்கிப்பீடியாவில் அவ்வாறில்லை. இது தொடர்பில் மயூரனும் நானும் உரையாடிய ஒரு நாளில் தான் சேரன், உ. என்றும் இராசரத்தினம், வ. அ. என்றும் கட்டுரைகள் உருவாக்கப்பட்டன என்றே ஞாபகம். ஆயினும் ஏனைய எல்லாக் கட்டுரைகளையும் போலவே இருக்கட்டும் என்றே குறித்த இரு கட்டுரைத் தலைப்புக்களையும் மாற்றக் கேட்டேன். இது தொடர்பில் விவாதித்து ஒரு முடிவுக்கு வருவது நல்லது. உங்களது கருத்துடன் நானும் உடன்படுகிறேன். கோபி 16:14, 15 ஜூன் 2006 (UTC)

மேலும் சேரன் விடயத்தில் சேரன் (கவிஞர்) என்பதே போதுமானது. --கோபி 16:17, 15 ஜூன் 2006 (UTC)

Start a discussion about சேரன் (கவிஞர்)

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சேரன்_(கவிஞர்)&oldid=59337" இலிருந்து மீள்விக்கப்பட்டது