உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:செய்மதி இடஞ்சுட்டல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாவலிப்பு

[தொகு]

நாவலிப்பு என்பது இங்கு navigation என்ற ஆங்கிலச் சொல்லைக் குறிப்பதாகிறது. Navigate என்ற சொல்லின் மூலம் நாவாய் என்ற தமிழ்ச் சொல் தான் என்று ஆங்கில விக்சனரியில் கூட ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. நாவாய் என்றால் பாய்மரக் கப்பல். நா என்றால் கப்பலின் வலிக்குந்துடுப்பின் அகன்ற பகுதி. அவ்வகன்ற பகுதியினால் கடல் நீரை வலிப்பதினால் படகு செல்லும் திசையைத் திருப்பமுடிகிறது. இதேப் போன்று விண்வெளிக் கோள்களும், தங்கள் 'நா'வை வலித்து சரியான புவி-வெளி இடத்தை அறிகிறது என்பதுவாய் இங்கு பயன்படுத்தியுள்ளேன். இதில் 'நா' என்ற சொல் தற்கால புவி-வெளி இடங்காட்டு தொழில்நுட்பத்தை குறிக்கும் என நம்புகிறேன். --இராச்குமார் (பேச்சு) 13:59, 28 சூன் 2012 (UTC)[பதிலளி]

இதனை செய்மதி நாவலித்தல் எனலாமா?--இராச்குமார் (பேச்சு) 17:45, 29 சூன் 2012 (UTC)[பதிலளி]
நாவாய் என்பது தமிழ்ச்சொல்லாக இருந்தாலும் (பாவாணர் கருத்துப்படி), நாவலிப்பு என்பது நாவிகேசன் என்பதற்குப் பொருந்தாது என்பது என் கருத்து. நாவிகேசன் என்பது வழியறிந்து செல்லுதல். வழியறிதல், வழிகாட்டி. நாவலிப்பு என்றால் நாக்குக்கு ஏதோ வலிப்பு என்பது போல் பொருள் சுட்டு தருகின்றது. சில இடங்களில் இப்படி அமைந்தாலும், வழக்கத்தா சரியான பொருள் ஏற்கபப்டும் என்றாலும். வேரு விதமாகச் சொல்லிப்பார்ப்பது நல்லது. --செல்வா (பேச்சு) 18:02, 29 சூன் 2012 (UTC)[பதிலளி]
நீங்கள் சொல்வது சரியே. இந்த மூலச்சொல்லிருந்தே கலைச்சொல்லாக்கம் செய்தால் நன்றாக இருக்கும் அல்லவா. அதனாலே தான் நல்ல தலைப்பை எதிர்ப்பார்க்கிறேன். சரிவரவில்லை யென்றால் வேறுப் பெயராகவே மாற்றி விடலாம். செய்மதி நாவடித்தோடல் என்று கூறலாமா? --இராச்குமார் (பேச்சு) 18:47, 29 சூன் 2012 (UTC)[பதிலளி]
இராச்குமார், ஆங்கிலச்சொல்லாகிய navigation என்பதில் navis = கப்பல், மரக்கலம், என்பதில் இருந்து வந்தது. navigate என்னும் வினைச்சொல், கடலில் பாய்மரக்கப்பல் போல் காற்றால் உந்தப்படும் கப்பல் வழியாக ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்குப் போகும் வினையைக் குறிக்கப் பயன்பட்டது. வானூர்திகளில் பயணம் செய்யும் பொழுதும், ஓரிடத்தில் இருந்து இன்னோரிடத்துக்கு வழியறிந்து செல்வதைக் குறிக்கப் பயன்படுத்தத்தொடங்கியது, முதலில் பலூன் என்னும் நொய்ம்பை வழியாக செலுத்துவதற்கும், இது 1784 இலேயே ("Universal Mag. 74 p. ii, By imitating the action of..wings, sails, oars, and a rudder, we may be able to navigate a Globe [sc. a balloon] in any direction we please." பார்க்கவும் ஆக்ஃசுபோர்டு ஆங்கில அகராதி) தொடங்கினார்கள், பின்னர் 1819 இலும் தொடர்ந்து பயன்படுத்தத் தொடங்கி, 1900களில் வானூர்திகளுக்குப் பயன்படுத்தினர். இதில் கப்பல், மரக்கலம் (navis) என்பதற்கான தொடர்பு ஏதும் இல்லை. ஆனால் பொருள் வழியறிதல் என்பதாக மாறியது. பின்னர் தானுந்து (மகிழுந்து, கார்) போன்றவற்றுக்கும், புதிய இடத்துக்கு நடந்து போவதற்கும், சிறுதடைகளைத் தாண்டி வழியறிந்து போவதற்கும் ஆங்கிலத்தில் பயன்படுகின்றது (மிக விரிவாக ஒவ்வொரு பொருளும் தோன்றிய வரலாற்றை ஆக்ஃசுபோர்டு அகரமுதலி விளக்குகின்றது). navigate என்பதற்கு வழியறிதல் (finding a travelling path) என்றே பொருள். கணினியில் உள்ள navigation என்பதும், எது எங்கு இருக்கின்றது என்று செல்லும் வழியை அறியத்தரும் (சென்று பயன்படுத்தும்) கருவி. இங்கே satellite navigation or SAT NAV என்பது செயற்கைத்துணைக்கோள் துணையுடன் புவியில் இடங்காட்டுதல் என்பதே. செயற்கைத்துணைக்கோள்/செய்மதி வழி இடங்காட்டி. அல்லது இடஞ்சுட்டி. இதில் நாவாய், என்னும் சொல் வரவேண்டிய தேவையே இல்லை. ஆங்கிலத்தில் அவர்கள் பொருள் கொள்ளும் முறைமையும் வரலாறும் வேறு. அதனை நாம் இங்கு பின் பற்றினால். நாம் வழிதவறிவிடுவோம் :) (வழியறிதலுக்கு மாறாக வழிதவறிவிடுவோம்). செய்மதி/செயற்கைக்கோள் இடஞ்சுட்டி எனலாம் என்று நினைக்கின்றேன். அதாவது செயற்கைக்கோள்/செய்மதியின் துணைகொண்டு இடஞ்சுட்டுவதாதும். இது உலக உருண்டை முழுவதுக்குமான இடஞ்சுட்டி முறைமையாக இன்று வளர்ந்துள்ளது. "global navigation satellite system or GNSS." (செயற்கைத் துணைக்கோள் வழி உலக இடஞ்சுட்டி முறைமை- செ.உ.இ.மு).--செல்வா (பேச்சு) 22:57, 29 சூன் 2012 (UTC)[பதிலளி]
அப்படியென்றால் செய்மதி இடஞ்சுட்டல் (satellite navigation) என்று பெயரிடாலாமா? --இராச்குமார் (பேச்சு) 04:18, 30 சூன் 2012 (UTC)[பதிலளி]
GPS க்கு புவியிடங்காட்டி என்று பயன்படுத்தப்பட்டுள்ளது. இடஞ்சுட்டி (navigator), இடஞ்சுட்டு (navigate), இடஞ்சுட்டல் (navigation) என்று பயன்படுத்தலாம். --இராச்குமார் (பேச்சு) 05:22, 30 சூன் 2012 (UTC)[பதிலளி]